ஆப்நகரம்

பிரியாணி எச்சரிக்கை: கெட்டுப்போனதை வைத்து விற்பனை, மக்களே உஷாரா இருங்க...

வேலூரில் ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்படும் சம்பவம் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Samayam Tamil 20 Sep 2021, 6:05 pm
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஹோட்டல்களில் சோதனை நடத்த உணவு பாதுகாப்புத் துறை கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஹோட்டல்களில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil பிரியாணி எச்சரிக்கை: கெட்டுப்போனதை வைத்து விற்பனை, மக்களே உஷாரா இருங்க...


இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தலைமையில் அதிகாரிகள் ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், வேலூர் சாய்நாதபுரம், பாகாயம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள ஹோட்டல்கள், தள்ளுவண்டிக் கடை என மொத்தம் 16 உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்குக் கெட்டுப்போன மீன், இறைச்சி காய்கறிகளைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தப்படுகிறதா என்று சோதனை செய்துள்ளனர்.

4.9 கிலோ தங்கம், 9 சொகுசு கார்கள் மற்றும் பல பறிமுதல்... யாரிடமிருந்து தெரியுதா?
அந்த சோதனையில், கெட்டுப்போன 20 கிலோ மாட்டு இறைச்சி, 8 கிலோ சிக்கன் பிரியாணி, அதிக அளவு கலர் பயன்படுத்தி பொறிக்கப்பட்ட 2 கிலோ சிக்கன் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், சுகாதாரமின்றி இயங்கிய 3 ஹோட்டல்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதோடு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி