ஆப்நகரம்

கொரோனாவுக்கு மீண்டும் மூலிகை சிகிச்சை!

ஆம்பூரில் கொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சியை எம்எல்ஏ வில்வநாதன் துவங்கி வைத்தார்.

Samayam Tamil 25 Jan 2022, 9:22 pm
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நோய் தொற்று பரவலை தடுக்க திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலூர் புற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையத்தின் சார்பில் பொது மக்களுக்கான இலவச சித்த மருத்துவ சிகிச்சை முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி இன்று ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
Samayam Tamil coronavirus herbal treatment


சித்த மருத்துவ கண்காட்சியை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும், மூலிகை மருத்துவம், மூலிகை முகக்கவசம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் வேலூர் புற்று மகரிஷி மருத்துவ சேவை மையத்தின் மருத்துவர் பாஸ்கர் சார்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க கூடிய மூலிகை, முகக்கவசம், தாளிசாதி மாத்திரை, கபசுரக் குடிநீர் மற்றும் மூலிகைகள் அடங்கிய பெட்டகம் உடன் மூலிகைச்செடிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது.

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின்போது திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இரண்டு இடங்களில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடைந்தனர் என்பதும் சித்த மருத்துவர் பாஸ்கரின் சார்பில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக மூலிகை முகக் கவசங்கள் வழங்கப்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி