ஆப்நகரம்

அமைச்சர் துரைமுருகன்: பேராசிரியர் வேடிக்கையாக சொன்னது உண்மையாகிவிட்டது.. நூற்றாண்டு விழாவில் நெகிழ்ச்சி!

என்றோ ஒருநாள் பேராசிரியர் வேடிக்கையாக என்னை பொதுச்செயலாளர் இருக்கையில் அமர சொன்னார். அவர் எதை மனதில் வைத்து சொன்னார் என தெரியவில்லை. ஆனால் இன்று அது உண்மையாகி உள்ளது என வேலூரில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 12 Feb 2023, 10:42 am

ஹைலைட்ஸ்:

  • என்றோ ஒருநாள் வேடிக்கையாக என்னை பொதுச்செயலாளர் இருக்கையில் அமர சொன்னார்.
  • இன்று அது உண்மையாகி உள்ளது.
  • பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சி
என்றோ ஒருநாள் பேராசிரியர் வேடிக்கையாக என்னை பொதுச்செயலாளர் இருக்கையில் அமர சொன்னார். அவர் எதை மனதில் வைத்து சொன்னார் என தெரியவில்லை. ஆனால் இன்று அது உண்மையாகி உள்ளது என வேலூரில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தமிழ் இயக்கம் மற்றும் வேலூரில் உள்ள தனியார் (VIT) பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி, காட்பாடியில் உள்ள தனியார் (விஐடி) பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அமைச்சர் துரைமுருகன், விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், தமிழ் ஆர்வளர்கள் மற்றும் பேராசிரியர் அன்பழகனின் குடும்பத்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் கூறியதாவது: "பேராசிரியர் அன்பழகன் அவ்வளவாக பேச மாட்டார். ஆனால் பேசினால் தனது பேச்சால் சாவடி அடிச்சுடுவார். தைரியம் மிக்கவர் பேராசிரியர். இயக்கத்துக்காக எதையும் தாங்கிக்கொண்டு இருப்பவர்.


பேராசிரியர் இருந்த இடத்தில் இன்றைக்கு நான் உள்ளேன். அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்தபோது, என்றோ ஒருநாள் வேடிக்கையாக என்னை பொதுச்செயலாளர் இருக்கையில் அமர சொன்னார். அவர் எதை மனதில் வைத்து சொன்னார் என தெரியவில்லை. ஆனால் இன்று அது உண்மையாகி உள்ளது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இறுதி நிமிடம் வரை கட்சி நிகழ்ச்சியில் இருந்தவர். பேராசிரியருக்கு நூற்றாண்டு விழா எடுத்த வேந்தர் விசுவநாதனை பாராட்டுகிறேன். வைகோ அவர்கள் கட்சி ஆரம்பித்து முதலில் என் தொகுதிக்கு தான் நிகழ்ச்சிக்காக வந்தார். அப்போதும் என்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதவர் வைகோ. வைகோவுக்கும், எனக்கும், விசுவநாதனுக்கும் உள்ள உறவு அந்தரங்கம் அது யாருக்கும் தெரியாது" என பேசினார்.

பின்னர் விழா பேருரையாற்றிய மாநிலங்களவை உறுப்பினரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ பேசுகையில் கூறியதாவது: "1989 -ல் நான் இலங்கையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அன்றைய நாளிதழ்களில் செய்தி வெளியாகியது அதை அறிந்து எனது வீட்டிற்கு வந்து என்னை பார்த்து "வந்துவிட்டாயப்பா என கூறி" கட்டிப்பிடித்து அழுதவர் பேராசியர்.

ராமையா என்ற பெயரை அன்பழகன் என மாற்றியவர். பலரது பெயர்களை தமிழ் பெயர்களாக மாற்றி அமைத்தவர். திருவாரூரில் திராவிடர் கழகம் வளர பேராசிரியரின் தந்தையும் ஒரு முக்கிய காரணம். அண்ணா முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க இருந்த சமயத்தில் அவரை காவல்துறை தேடியது. அச்சமயம் பேராசிரியரின் மாமனாரின் வீட்டில் இருந்து தான் அண்ணா முதல் அமைச்சரவையை அமைத்தார்.

அண்ணா தான் முதலில் பேராசிரியரை மேடை ஏற்றியவர். அங்கு தான் கலைஞரோடு பழக்கம் ஏற்படுகிறது. 1942 கால கட்டத்தில் அண்ணா பேசிய பேச்சுகள் இப்போது வரை கிடைக்கவில்லை. ஒவ்வொரு பொது கூட்டத்திலும் பேராசிரியரின் பேச்சு அனல் பறக்கும். பேராசிரியர் பேச்சை போல் எங்கும் கேட்டது இல்லை. அவரது பேச்சை கேட்கும் போது மெய்சிலிர்க்கும்.

எம்.பி மாணிக்கம் தாகூர்: போட்டியிட பயந்து அண்ணாமலை இலங்கை பயணம்.. விருதுநகரில் பரபரப்பு பேட்டி!

பெரியாரின் சாயலை, துணிச்சலை, தைரியத்தையும், அண்ணாவின் சாயலையும், எழுத்து, பேச்சையும், சாதாரண மனிதனும் அதிகாரத்துக்கு வர முடியும் என்ற காமராஜரின் சாயலையும், ராஜதந்திரியான ராஜாஜியின் சாயலையும் கலைஞரிடத்தில் பார்க்கிறேன் என கலைஞர் கருணாநிதி குறித்து பேசியவர் பேராசிரியர் அன்பழகன்.

பேராசிரியர் பேச்சில் உள்ள மெய்சிலிர்ப்பு வேறெங்கும் நான் பார்த்தது இல்லை. இந்த விழா எடுத்து, எனக்கும் பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூற கடமை பட்டுள்ளேன். பேராசிரியரை பற்றி முக்கால் மணி நேரம் பேச தயார் செய்து வந்திருந்தேன். நீங்கள் குறிப்பிடுவது போல் எட்டு மணி ஆகிவிட்டதால் உரையை முடித்துக் கொள்கிறேன்" என வைகோ பேசினார். விழா முடிவில் பேராசிரியர் அன்பழகனின் குடும்பத்தாருக்கு மரியாதை செய்யப்பட்டு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி