ஆப்நகரம்

வேலூர்: கூர்நோக்கு இல்லங்களில் இருப்பவர்கள் தப்பி செல்லாமல் இருக்க நடவடிக்கை

தமிழ்நாட்டில் உள்ள கூர் நோக்கு இல்லங்களில் அடைக்கப்பட்டுள்ள சிறார்கள்தப்பி செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் தெரிவித்தார்.

Written byபிரபாகர் B | Samayam Tamil 21 Apr 2023, 8:17 pm
வேலூர் காகிதபட்டரையில் உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்பட மாவட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Samayam Tamil anand
anand


கூர்நோக்கு இல்லங்களில் நல்ல வசதி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.ஜி ஆனந்த் கூறியதாவது,

தமிழகத்தில் ஆங்காங்கே உள்ள கூர்நோக்கு இல்லங்களில் சிறார்கள் தப்பி செல்வது குறித்து,
அடிப்படை காரணங்கள் ஆய்வு செய்து உள்ளோம். கூர்நோக்கு இல்லங்களில் மாணவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தோம்.

இதனுடைய அறிக்கைகள் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தெரிவிக்கப்படும். வேலூரில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் மாணவர்களுக்கு சிறப்பான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

தப்பி சென்ற ஒருவரை தேடும் பணி தீவிரம்

வேலூரில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஆறு மாணவர்கள் அண்மையில் தப்பி சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டும் இன்னும் மீட்கப்படவில்லை. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மற்ற ஐந்து பேர் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு வேலூர் கூர்நோக்கு இல்லத்தில் உள்கட்ட அமைப்பு வசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ளது. இங்குள்ள மாணவர்களிடையே கலந்துரையாடல் செய்த போது மாணவர்கள் நல்ல முறையில் கவனிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

தப்பி செல்லாதவாறு நடவடிக்கை

கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு செய்து அதன் அறிக்கையில் டெல்லியில் உள்ள தேசிய குழந்தைகள் நல ஆணையத்தில் தெரிவிக்கப்படும். அதன் பிறகு சில ஆலோசனைகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்படும்.
கூர்நோக்கு இல்லத்தில் இருந்து மாணவர்கள் தப்பிச் செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மீது குறை சொல்ல முடியாது. கூர்நோக்கு இல்லங்களில் முழு அளவில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பல்வேறு பயிற்சிகளும் கூர் நோக்கு இல்லங்களில் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கூர்நோக்கு இல்லங்களில் மாணவர்கள் தப்பி செல்லாத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி