ஆப்நகரம்

சிந்தித்து வாக்களித்தால் மக்களின் வரி பணம் வீணாகாது - அமைச்சர் ஆர். காந்தி

ஜப்பான் நாட்டை போல மாநிலம் மற்றும் நாடு வளர வேண்டும் என்றால் மாணவ மாணவிகளின் கல்வி திறனாளையே அடைய முடியும் என்று அமைச்சர் ஆர். காந்தி பேச்சு.

Samayam Tamil 28 Nov 2022, 7:01 pm
ராணிப்பேட்டை பேருந்து நிலையம் அருகே திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் 45 ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Samayam Tamil r gandhi
minister r gandhi


இந்த நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகள் விதைகள் உள்ளிட்டவைகளை வழங்கி சிறப்பித்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆர். காந்தி தெரிவிக்கையில், சிந்தித்து வாக்களித்தால் மக்களின் வரி பணம் வீணாகாது எனவும் அதன் காரணமாகவே மாணவ மாணவிகள் கல்வியை முழுமையாக கற்றுக்கொண்டு சிந்தித்தல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அதன் மூலம் பலருக்கு ஆலோசனைகளை வழங்கலாம் என தெரிவித்தார்.

மேலும், சமீப சில மாதங்களுக்கு முன்பு அரசு பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றதாகவும் அந்த நாட்டின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருப்பது கண்டு வியந்ததாகவும் அது போன்று நமது மாநிலம் மற்றும் நாடு வளர வேண்டும் என்றால் மாணவ மாணவிகளின் கல்வி திறனாளையே அடைய முடியும் என மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.


மேலும், அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் தயக்கம் காட்டி வந்ததாகவும் தற்போது தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டு வரும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், அரசு பள்ளிகளின் தரங்கள் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் தமிழக அரசு மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

திமுக தலைமையிலான அரசு கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் அரசாக செயல்பட்டு வருவதாகவும் மாணவ மாணவிகள் எந்த நேரத்திலும் அணுகி கல்வி உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் ஆர் காந்தி தெரிவித்தார்.

அடுத்த செய்தி