ஆப்நகரம்

3 பேரை மடக்கிய போலீஸ்; இப்படி இறங்குனா எப்படி?

வேலூர் மாவட்டம், தொரப்பாடி அருகே கே.கே நகரில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பைக் மாயமானது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 17 Jun 2021, 12:30 pm
வேலூர் மாவட்டம் தொரப்பாடி அடுத்த கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் என்பவரின் மகன் கிருஷ்ணா சாகர். இவர், வேலூர் லட்சுமி தியேட்டர் காம்ப்ளக்ஸில் உள்ள ஹெல்த்கேர் சென்டரில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆக பணிபுரிந்து வருகிறார்.
Samayam Tamil கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்


வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு கடந்த மாதம் 12ஆம் தேதி இரவு 9 மணி அளவில் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உறங்க சென்றுள்ளார்.

மறுநாள் (மே 13 ஆம் தேதி) விடியல் பொழுதில் சுமார் 4.30 மணி அளவில் வீட்டின் பின்புறம் உள்ள நிலத்திற்கு செல்வதற்காக பைக்கை எடுக்க சென்றுள்ளார். அப்போது, பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து திருடுபோன தனது பைக்கை கண்டுபிடித்து தருமாறு பாகாயம் காவல் நிலையத்தில் கடந்த 13ஆம் தேதி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நரசிம்மனிடம் புகார் அளித்துள்ளார்.

அம்மன் குளத்தில் ‘ஈஸ்வரன்’; ஆச்சரியப்பட்ட கிராம மக்கள்!

புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் பைக் திருடிய வேலூர் சார்பனா மேடு பகுதியை சேர்ந்த ரஹீம் (21), முகம்மது யாசின் (20) மற்றும் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த பகாத் பாஷா (21) ஆகிய 3 பேரையும், போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்து உரிய நபரிடம் ஒப்படைத்தனர்.

அடுத்த செய்தி