ஆப்நகரம்

கொரோனா; வேலூரில் திடீர் உத்தரவுகள் பிறப்பிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வேலூரில் சில திடீர் உத்தரவுகள் பிறப்பித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

Samayam Tamil 18 Apr 2021, 1:24 pm
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக வேலூர் கோட்டை உள்ளிட்ட பொழுதுபோக்கு தளங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் நேதாஜி மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் பூக்கடைகள் மற்றும் காய்கறி கடைகள் இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
Samayam Tamil பூக்கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
காய்கறி, பூக்கடைகளை இடமாற்றம் செய்ய ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்; குரு லிங்க சங்கம பாத யாத்திரை தொடங்கியது

அதன்படி நேதாஜி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் செய்ய காலை 6 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காய்கறி கடைகள், சில்லரை விற்பனை கடைகள் மாங்காய் மண்டி அருகே உள்ள பகுதியில் 90 கடைகளும், பூக்கடைகள் ஊரிசு பள்ளி மைதானத்திலும் டவுன்ஹால் வளாகத்திலும் இயங்க தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட் லீவுன்னா மீனுக்கு எங்கேய்யா போவோம்? மக்கள் அதிருப்தி!

நாளை முதல் தற்காலிக கடைகள் இயங்கும் என வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் தெரிவித்துள்ளார். மேலும் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும், மீறினால் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி