ஆப்நகரம்

ரூ.1.25 கோடி, 1000 படுக்கையுடன் சித்த மருத்துவ சிகிச்சை; இதல்லாம் கொடுத்தது யாருன்னு? பார்த்தா அசந்துடுவீங்க!

கொரோனா சிகிச்சைக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.1. 25 கோடி பணம் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு 1000 படுக்கைகளுடன் கூடிய வசதியை விஐடி வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அளித்துள்ளது.

Samayam Tamil 13 May 2021, 1:59 pm
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், சிகிச்சைகளுக்காகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil rs 1 25 crore to the chief ministers relief fund for corona treatment provided by vit vellore university of technology
ரூ.1.25 கோடி, 1000 படுக்கையுடன் சித்த மருத்துவ சிகிச்சை; இதல்லாம் கொடுத்தது யாருன்னு? பார்த்தா அசந்துடுவீங்க!


அதன்படி (வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்) விஐடி வேலூர் மற்றும் விஐடி சென்னை பேராசிரியர்கள், ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் மற்றும் விஐடி நிர்வாகம் சார்பில் 1.25 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த நிதியை முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் அவர்களிடம் (மின்னனு மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பற்றுச்சீட்டினை ) விஐடி பதிவாளர் சத்திய நாராயணன் வழங்கினார்.

கொரோனாவுக்கு 3 நாளில் 39 பேர் பலி; அதுவும் ஒரே அரசு மருத்துவமனையில்!

அப்போது விஐடியின் நிலையான ஊரக வளர்ச்சி மையத்தின் இயக்குனர் சுந்தர்ராஜன், விஐடி வேந்தர் விசுவநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் கொரோனா நோயை தடுப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் அரசாங்கத்திற்கு தேவையான உதவிகளை செய்ய விஐடி தயாராக இருக்கிறது என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

முதல்வருக்கு கடிதம் எழுதிய சிறுமி; அமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்து!

முன்னதாக விஐடி வேலூர் வளாகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு 1000 படுக்கைகளுடன் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டு சிகிச்சைகள் தொடங்கப்பட்டது.

அடுத்த செய்தி