ஆப்நகரம்

ராணிப்பேட்டையில் ஜவுளி பூங்கா - அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பணப்பாக்கத்தில் நிலம் அளிக்கும் பட்சத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 May 2022, 2:28 pm
சட்டப்பேரவையில், இன்று கேள்வி நேரத்தின் போது, சோளிங்கர் தொகுதி, சோளிங்கர் மற்றும் பணப்பாக்கத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க அரசு ஆவன செய்யுமா என சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் கேள்வி எழுப்பினார்.
Samayam Tamil Minister R gandhi


அதற்கு பதிலளித்து பேசிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, சோளிங்கர் மற்றும் பணப்பாக்கத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான நிலம் அளிக்கும் பட்சத்தில் integrated textile park திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் முன்வந்தால் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்தபோது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜவுளி பூங்கா அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டுள்ளது. பணப்பாக்கத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

அடுத்த செய்தி