ஆப்நகரம்

சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு அரசு அதிரடி உத்தரவு; கொரோனா சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தம்!

வேலூர் சிஎம்சி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் வெளிமாநில நோயாளிகளுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சிஎம்சி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் வெளி மாநிலங்களை சேர்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 May 2021, 11:28 am
வேலூர் சிஎம்சி மருத்துவமனை மிகவும் பிரசித்தி பெற்றது. இதனால் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வேலூரை நோக்கி படையெடுப்பது வழக்கம்.
Samayam Tamil வேலூர் சிஎம்சி மருத்துவமனை
வேலூர் சிஎம்சி மருத்துவமனை


தற்போது தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதற்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அதிகமாக நோயாளிகள் குவிந்தபடி உள்ளனர்.

இவர்களுடன் அதிகமாக வெளி மாநில நோயாளிகளும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற குவிந்து வருகின்றனர். இதனால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருகிறது.

சடலத்தை அடக்கம் செய்ய உறவினர்கள் தயக்கம்; ஊராட்சி மன்றத்தலைவரை கொண்டாடும் மக்கள்!

இதன் காரணமாக சிஎம்சி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வெளிமாநில நோயாளிகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சிஎம்சி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் வெளி மாநிலங்களை சேர்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க அனைத்து மருத்துவமனைகளுக்கும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி