ஆப்நகரம்

மக்கள் நலப்பணி செய்ய முடியவில்லை.. தர்ணாவில் ஈடுபட்ட விசிக பெண் கவுன்சிலர்!

திமிரி சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலரின் பொறுப்பின்மையால் மக்கள் நலப்பணிகளை செய்ய முடியவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெண் கவுன்சிலர் தனி மனிதராய் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 May 2022, 12:37 pm
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள திமிரி சிறப்புநிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று திமுகவை சேர்ந்த மாலா இளஞ்செழியன் பேரூராட்சி தலைவராக உள்ளார்.
Samayam Tamil Timiri Town Panchayat


இந்நிலையில், திமிரி சிறப்புநிலை பேரூராட்சியில் பல வருடங்களாக நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல் இருந்ததால் பொறுப்பு செயல் அலுவலரால் எந்தவொரு அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

தற்போது பொறுப்பு செயல் அலுவலர் மனோகரன் புதியதாக பொறுப்பேற்றுள்ள வார்டு பெண் உறுப்பினர்களிடம் "நான் Incharge நான் உங்களுக்கு எதுவும் செய்யமாட்டேன் நான் இந்த ஊரில் வேலை செய்ய விருப்பமில்லை நான் உங்களுக்கு எந்த பதிலையும் சொல்ல மாட்டேன் நீங்கள் எந்த கேள்வியும் என்னிடம் கேட்கக் கூடாது" என்று பொறுப்பற்ற முறையில் கூறியதாக தெரிகிறது.


திமிரி பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் வார்டு பெண் உறுப்பினர்கள் 9 பேர் உள்ள நிலையில் வார்டு பெண் உறுப்பினர் பேச்சை உதாசினப் படுத்தியதாலும் பொறுப்பற்ற பதிலை கூறியதாலும் 20-5-2022 ஆம் தேதி திமிரி சிறப்புநிலை பேரூராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தை புறக்கணித்து பேரூராட்சி 5-வது வார்டு விசிக உறுப்பினர் ராதா நாகராஜன் அறவழியில் போராட்டம் நடத்தினார்.

மேலும், தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் திமிரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி