ஆப்நகரம்

சூட்டோடு சூடாக காரில் சென்ற கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த சூப்பர் போலீஸ்!

கடனை திருப்பி தராத தொழிலதிபரைக் கடத்திச் சென்ற கும்பலிடமிருந்து பாதிக்கப்பட்ட நபரை மீட்டு காரோடு சேர்த்து 4 பேரைக் கைது செய்த சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.

Samayam Tamil 9 Mar 2021, 9:54 am
திருப்பத்தூர், வாணியம்பாடி அடுத்த சென்னாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பைரோஸ். விலங்கு தோல் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரிடம் ரூ. 2. 50 லட்சம் மதிப்பிலான தோல்களை வாங்கி அதற்கான பணத்தை ஒரு வருடத்திற்கும் மேலாகக் கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார்.
Samayam Tamil சூட்டோடு சூடாக காரில் சென்ற கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த சூப்பர் போலீஸ்!


பணம் கேட்கும் போதெல்லாம் பைரோஸ் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அலக்கழித்து வந்ததால் ஒரு கட்டத்தில் இஸ்மாயில் பைரோஸை கடத்த திட்டமிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இஸ்மாயில் தனது மகன் ராம் மற்றும் கூட்டாளிகளான யாசின், அப்துல் பாசித் ஆகியோர் சேர்ந்து கொண்டு திண்டுக்கல்லிலிருந்து வாணியம்பாடி வந்துள்ளனர். இஸ்மாயில் பைரோஸ் இடம் பணம் கேட்டுள்ளார்.

அப்போது பணம் திருப்பி தராததால் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கூட்டாளிகள் மற்றும் இஸ்மாயில் பைரோஸை குண்டு கட்டாகத் தூக்கி காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

கட்டாயத் திருமணம் தாய் செய்த முயற்சி: தூக்கிட்டு வேலூர் இளம்பெண் சாவு!

இதனைப் பார்த்துக் கூச்சலிட்ட பைரோஸின் மனைவி ராபியா பஸ்ரி உடனடியாக வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்திற்குச் சென்று தனது கணவர் பைரோஸ் கடத்தப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் வாணியம்பாடி சுங்கச்சாவடி அருகே குறிப்பிட்ட காரை மடக்கி அதில் கடத்தப்பட்ட பைரோஸ் அகமதை மீட்டனர்.

கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரைக் கைது செய்த போலீசார் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அடுத்த செய்தி