ஆப்நகரம்

கை குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை.. செஞ்சியில் பரபரப்பு.. போலீசார் கிடுக்குபிடி விசாரணை!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கைக்குழந்தையுடன் விவசாய கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 21 Jan 2023, 11:32 am
செஞ்சி அருகே கை குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil கை குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கைக்குழந்தையுடன் விவசாய கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்எடையாளம் கிராமம் கடகால் தோப்பு பகுதியை சேர்ந்தவர் லாலு பா‌ஷா. இவரது மகள் பிர்தோஸ் (வயது 22). இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள ஆவூரை சேர்ந்த அப்துல்லா (25) என்பவருக்கும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி திருமணம் நடைபெற்றது. அப்துல்லா திருவண்ணாமலையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிர்தோஸ் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு அவருக்கு கடந்த 50 நாட்களுக்கு முன்பு, பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஹயானா என்று பெயரிட்டனர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த சூழ்நிலையில், கடந்த 2-ந்தேதி ஆவூரில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு பிர்தோஸ் குழந்தையுடன் சென்றார். பின்னர், அங்கிருந்து 17-ந்தேதி தாய் வீட்டுக்கு மீண்டும் வந்திருந்தார். நேற்று காலை 8 மணிக்கு பிறகு பிர்தோஸ் மற்றும் அவரது குழந்தையை காணவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள பாழடைந்த ஒரு விவசாய கிணற்றில் குழந்தை ஒன்று பிணமாக மிதந்ததை அந்த பகுதியினர் பார்த்தனர். இதுபற்றி அறிந்த பிர்தோசின் பெற்றோர் அங்கு சென்று பார்த்த போது, அது அவர்களது பேத்தி ஹயானா என்பது தெரியவந்தது. ஆனால் பிர்தோசை காணவில்லை.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த செஞ்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பிர்தோஸ் கிணற்றுக்குள் மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில், கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு பிர்தோஸ் பிணமாக மீட்டு கொண்டு வந்தனர். தகவல் அறிந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி தலைமையிலான் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் பிர்தோஸ் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்பது தெரியவந்தது.

தை அமாவாசையில் அலைமோதும் பக்தர்கள்; நிரம்பி வழியும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்!

தொடர்ந்து குழந்தை, தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடும்ப பிரச்சினை காரணமாக, கை குழந்தையுடன் பிர்தோஸ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் செஞ்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி