ஆப்நகரம்

கல்லூரி மாணவர்கள் செம ஹேப்பி; அமைச்சர் அளித்த 10 நாட்கள் கெடு!

கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் உத்தரவை உயர்க்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பிறப்பித்துள்ளார்.

Samayam Tamil 8 Dec 2021, 3:52 pm

ஹைலைட்ஸ்:

  • கல்லூரி அமைப்பதற்கான இடங்களில் நேரில் ஆய்வு
  • அறிவியல் ஆய்வக கட்டிடத்தையும் திறந்து வைத்தார்
  • பெரியார் கனவு நனவானதாகவும் அமைச்சர் பெருமிதம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உள்ளிட்ட 10 இடங்களில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும் என தமிழக அரசால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி இன்று திருக்கோவிலூர் பகுதியில் பல்வேறு இடங்களை பார்வையிட்டார்.

திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 34 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் பட்டிருந்த அறிவியல் ஆய்வக கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக திருக்கோவிலூர் வந்திருந்த அமைச்சர், ஆய்வக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

பள்ளி ஆசிரியர்கள் ஷாக்; அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!

இதன் பின்னர் அமைச்சர் பொன்முடி பேசும்போது, தற்போது பெரியார் கண்டதுபோல பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதிக அளவில் பட்டம் பெறுவது பெண்களாகவே இருக்கின்றனர். இதனால் பெரியார் கண்ட கனவு நனவாகியுள்ளது என்றார்.

அதன் பிறகு திருக்கோவிலூர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி கட்டுவதற்காக, திருக்கோவிலூர் புறவழிச்சாலை, ஆசனூர் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களை கல்லூரி கட்டுவதற்காக நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அரசு அலுவலகத்தில் ராகுல் காந்தி படம்; மோடி படம் எங்கே?..ன்னு பாஜக தகராறு!

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் ஆகியோரிடம் 10 நாட்களுக்குள் திருக்கோவிலூரில் கல்லூரி கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டு, தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அடுத்த செய்தி