ஆப்நகரம்

கூத்தாண்டவர் சித்திரை திருவிழா: கண் திறத்தல் நிகழ்ச்சியில் திருநங்கைகள் பரவசம்!

கூவாகத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெற்ற கூத்தாண்டவர் கண் திறத்தல் நிகழ்ச்சியில் ஏராளமான திருநங்கைகள் தாலி கட்டி கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 19 Apr 2022, 8:39 pm

ஹைலைட்ஸ்:

  • கூவாகத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெற்ற கூத்தாண்டவர் கண் திறத்தல் நிகழ்ச்சி
  • ஏராளமான திருநங்கைகள் தாலி கட்டி கொண்டு சாமி தரிசனம்
  • நாளை மாலை பலிச்சோறு படையல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil திருநங்கைகள் தாலி கட்டி கொண்டு சாமி தரிசனம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெறும்.
இத்தாண்டு கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 5 ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன் படி கூத்தாண்டவர் கோவிலின் முக்கிய நிகழ்வான சாமிகண் திறத்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான திருநங்கைகள் பூசாரி கையால் மணக்கோலத்தில் தாலி கட்டி கொண்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்தாண்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை (20ம் தேதி) காலை சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது.

தேரோட்டத்தின் போது பந்தலடியில் அரவான் களப்பலிக்கு பிறகு திருநங்கைகள் பூசாரி கையினால் கட்டிய தாலியை அறுத்து வெள்ளை புடவை உடுத்தி சோகத்துடன் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். மேலும் நாளை மாலை பலிச்சோறு படையலிடப்பட்டு, அதை குழந்தை பாக்கியம் இல்லாத புதுமண பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு 21ம் தேதி விடையாத்தியும், 22ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி