ஆப்நகரம்

பிளஸ் 1 மாணவியை கட்டாய கல்யாணம் செஞ்சுக்கிட்ட தாய்மாமன் கைது!

மைனர் பெண்ணை கட்டாய திருமணம் செய்த அவரது தாய் மாமனை போலீசார் கைது செய்தனர். பெண்ணை கடத்திய கல்லுாரி மாணவரை தேடி வருகின்றனர்.

Samayam Tamil 4 Mar 2021, 4:30 pm

ஹைலைட்ஸ்:

  • விழுப்புரம் மாவட்டம் , திருவெண்ணெய் நல்லூர் அருகே ஒரு கிராமத்தில் ப்ளஸ் 1 படிக்கும் இளம்பெண் சில தினங்களுக்கு முன் மாயமானார்.
  • போலீசார் விசாரணையில் அந்த பெண் கடத்தப்பட்டு, தாய் மாமனுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரிய வந்தது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மைனர் பெண்ணை மணந்த தாய்மாமன் கைது!
விழுப்புரம் அருகே மைனர் பெண்ணை மணந்த தாய்மாமன் கைது!
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது இளம் பெண். பிளஸ் 1 படித்து கொண்டு வீட்டில் இருந்த இவர், கடந்த 1 ஆம் தேதி இரவு திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின்படி திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மைனர் பெண்ணை கல்லுாரி மாணவரான தீனா (20) கடத்திச் சென்றது தெரிய வந்தது. தம்மை தேடி போலீசார் வருவதை அறிந்த தீனா இளம்பெண்ணை விட்டுவிட்டு தலைமறைவானார்.

பெண்ணை மீட்ட போலீசார், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த ஒன்றாம் தேதி மைனர் பெண்ணுக்கும், அவரது தாய் மாமனான ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (28) என்பவருக்கும் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது என்ற திடுக்கிடும் தகவல தெரிந்தது.

இதையடுத்து, மைனர் பெண்ணை திருமணம் செய்ததாக வழக்குப் பதிந்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

இளம்பெண்ணை விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மைனர் பெண்ணை கடத்திய கல்லூரி மாணவர் தீனாவை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி