ஆப்நகரம்

குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய்... அமைச்சர் சக்கரபாணி மெகா அப்டேட்!

விழுப்புரம்: நியாய விலைக் கடைகளில் தற்போது நடைமுறையில் உள்ள கைரேகை பதிவில், சில சிக்கல்கள் ஏற்படுவதைத் தொடர்ந்து, கருவிழி பதிவைக் கொண்டு பொருள்கள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 20 May 2022, 6:07 pm

ஹைலைட்ஸ்:

  • நியாய விலைக் கடைகளில் பேக்கிங் செய்து அரிசி
  • கடந்த ஓராண்டில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள்
  • ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கிலோ உளுந்தம் பருப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் காணை, காணைகுப்பம், அரகண்டநல்லூர் உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் ரைஸ்மில் பகுதிகளில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர், விழுப்புரம் மாவட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை சார்பில் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

பெண் அதிகாரியிடம் அத்துமீறிய விசிக பிரமுகர் - வைரலாகும் வீடியோ!

இதனைத்தொடர்ந்து, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்து கூறியதாவது:- தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் பேக்கிங் செய்து அரிசி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அடுக்கி வைக்கப்பட்டுள்ள திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளிலும், இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இடங்களிலும் விரைவில் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என்றார்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது, விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக்கடைகள் இரண்டாகப் பிரித்து, 68 புதிய பகுதிநேர நியாய விலைக் கடைகள் திறக்கப்படும் என்றார்.

மேலும் நியாய விலைக் கடைகளில் தற்போது நடைமுறையில் உள்ள கைரேகை பதிவில், சில சிக்கல்கள் ஏற்படுவதைத் தொடர்ந்து, கருவிழி பதிவைக் கொண்டு பொருள்கள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

திமுக வாக்குறுதி அளித்த ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கிலோ உளுந்தம் பருப்பு ஆகியவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது கண்டிப்பாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சேமிப்பு கிடங்கு, கருவூலம் போன்றவற்றில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் எனவும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் குறித்த கேள்விக்கு கண்டிப்பாக நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி