ஆப்நகரம்

உளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோயில்; கட்டுமான பணிகள் துவங்கியது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சுமார் 4 ஏக்கர பரப்பளவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியது.

Samayam Tamil 13 Jun 2022, 3:19 pm
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு அருகே திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோவில் கட்டுவதற்கு 4 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு நிலத்தை தேவஸ்தான நிர்வாகத்திற்கு தானமாக வழங்கப்பட்டது.
Samayam Tamil Ulundurpet Tirupati temple


அதன்படி கோயில் கட்டுவதற்கு கட்டுமான பணிகளை கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார். இந்தநிலையில் இன்று அதிகாலை சிறப்பு யாக பூஜையுடன் துவங்கி வேத மந்திரங்கள் முழங்க கோமாதா பூஜை நடைபெற்றது.

அதன் பின்பு கோயில் கட்டுமானப் பணியினை திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி தலைமையில், அறங்காவல் குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு முன்னிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க கட்டுமான பணி துவங்கியது.

இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மணிகண்ணன், செந்தில்குமார் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி