ஆப்நகரம்

90 சதவீத மாணவர்கள் வருகை: பள்ளிகள் திறப்பு பெரும் உற்சாகம்!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 10 மாதங்களாகப் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது.

Samayam Tamil 19 Jan 2021, 3:34 pm
விழுப்புரத்தில் கொரோனா முடக்கத்துக்குப் பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. முதல் நாளில் 90 சதவீத மாணவர்கள் வருகைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.
Samayam Tamil 90 சதவீத மாணவர்கள் வருகை: பள்ளிகள் திறப்பு பெரும் உற்சாகம்!


ஜனவரி 19ஆம் தேதியான இன்று முதல் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மாணவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் பள்ளிகளுக்கு வரலாம் எனத் தெரிவித்திருந்தது.

இதையடுத்து இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 385 அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. காலை 8மணி முதலே மாணவர்கள் வருகை தொடங்கியது. பள்ளி வளாகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்ட தெர்மல் மீட்டர் மூலம் மாணவர்களின் உடல் வெப்பநிலை கண்டறிந்து பின்னர் கைகளைச் சுத்தப்படுத்துவதற்கு சானிடசைர் வழங்கப்பட்டது.

பள்ளிகளை மூட உத்தரவு: தீவிர ஆய்வில் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள்!

அதனைத் தொடர்ந்து தனி மனித இடைவெளியுடன் வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டனர். முதல் நாளில் மாணவ மாணவிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முதல் நாளில் 90 சதவீத மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.

விழுப்புரத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளை மேற்பார்வையிட்டு, மாணவர்கள் கொரோனா விதிகளைப் பின்பற்றித் தனி மனித இடைவெளியுடன் அமர வேண்டும், தனியாகக் குடிநீர், உணவு எடுத்து வந்து பருக வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

அடுத்த செய்தி