ஆப்நகரம்

உலக மொழியாகும் 'தமிழ்'; அமைச்சர் பொன்முடி சொன்ன நற்செய்தி!

தமிழ் மொழியை உலக மொழியாக மாற்றுவதற்கான முயற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 May 2022, 4:01 pm
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு ஓராண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டது. இந்த மலரினை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, சிறுபாண்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் வெளியிட்டு நலத்திட்டங்களை வழங்கினர்.இந்நிகழ்வில் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், ஆட்சியர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Samayam Tamil K Ponmudy


அதன் பின்னர் அமைச்சர் பொன்முடி மேடையில் பேசியதாவது:-
"தமிழ்த்தாய் வாழ்த்து பாடலினை ரோமில் அமைச்சர் மஸ்தான் ஒலிக்க செய்தது சாதனரமான விஷயம் அல்ல.அது தமிழக முதலமைச்சருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மொழியை உலக மொழியாக மாற்றுவதற்கான முயற்சியை தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.

தமிழை மற்ற பல்கலைக்கழகங்களிலும் கொண்டு வர வேண்டும் என ஆளுநரையே பேச வைத்தவர் தான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓராண்டில் பல்வேறு சாதனைகள் புரிந்த முதல்வராக திகழ்வதாகவும் வரக்கூடிய நான்கு ஆண்டுகள் மட்டுமல்ல தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் நீடிப்பார்.
சி.வி.சண்முகம் கோட்டையில் ஓட்டை; சசிகலாவை வரவேற்க அதிமுக கொடியுடன் பேனர்!

விழுப்புரம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் வழங்கி வருகிறார். அதன் பேரில் தான் திருக்கோவிலூர், செஞ்சி போன்ற இடங்களில் புதிய இரண்டு அரசு கலை கல்லூரிகள் அமைக்கவும், மாவட்ட மருத்துவமனைகள் இரண்டு தரம் உயர்த்தப்பட்டு உள்ளது" என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். அவருக்கு எனது வாழ்த்துக்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு என்றோ செய்திருக்க வேண்டிய வேலையை இன்றாவது உச்சநீதிமன்றம் செய்துள்ளது. தமிழக முதலமைச்சர் எதிர்கட்சியாகவும், ஆளுங்கட்சியாக இருந்தபோதும், கலைஞர் காலத்திலிருந்து எடுத்த முயற்சிக்கு தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் வெற்றி கிடைத்துள்ளது" என்று கூறினார்.

அடுத்த செய்தி