ஆப்நகரம்

போதைப் பொருள் தடுப்பு மினி மாரத்தான் போட்டி: மாணவா்கள் ஆா்வத்துடன் பங்கேற்பு!

போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ராஜபாளையத்தில் நடந்த மினி மாரத்தான் போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Curated bySrini Vasan | Samayam Tamil 26 Jun 2022, 3:56 pm

ஹைலைட்ஸ்:

  • போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான மினி மாரத்தான் போட்டி
  • 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மினி மாரத்தான் போட்டி
போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகவும் உலகளவில் இன்று (ஜூன் 26) சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடந்தது.

தேசிய அளவில் 'முன்னேற விழையும் மாவட்டங்கள்' திட்டம்: விருதை அள்ளும் விருதுநகர்!
செண்பக தோப்பு சாலையில் நடந்த இந்த போட்டியானது 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என இரண்டு பிரிவுகளில் நடந்தது. இந்த போட்டிகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாணவ மாணவிகள் என பல்வேறு தரப்பை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

10 கிலோ மீட்டர் பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த ஆண்கள் மற்றும் பெண்கள், 5 கிலோ மீட்டர் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆண்கள் மற்றும் பெண்கள், மாணவர்கள் மற்றும் மாணவியர் என 12 நபர்களுக்கு ரூ. 17 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த வெற்றியாளர்களுக்கு கேடையமும், சான்றிதழும் பரிசாக வழங்கப்பட்டது.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி