ஆப்நகரம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற 336 வது சித்திரை வெண்குடை திருவிழா; மதுரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது!

ராஜபாளையத்தில் ஏழு தெருகளை சேர்ந்த சமூகத்தினர் ஒன்றிணைந்து கொண்டாடும் சித்திரை வெண்குடை திருவிழா இன்று நடைபெற்றது

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 14 Apr 2023, 1:59 pm

ஹைலைட்ஸ்:

  • 336 வது சித்திரை வெண்குடை திருவிழா

  • ராஜபாளையத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் ஒன்றிணைந்து நடத்தினார்கள்

  • மதுரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil தேவேந்திர குல வேளாளர்கள் இணைந்து நடத்தும் சித்திரை வெண்குடை திருவிழா
தேவேந்திர குல வேளாளர்கள் இணைந்து நடத்தும் சித்திரை வெண்குடை திருவிழா
ராஜபாளையம் பகுதி மக்கள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பேருந்து நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள தெருக்களில் ஒரே பிரிவினை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து சித்திரை முதல் நாள் அன்று வெண்குடை திருவிழா ஆண்டு தோறும் நடத்துவார்கள். ஆனால் இந்த திருவிழா குறித்து சமாதான கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. அப்போது. ஏழு தெருக்களில் ஒன்றான அம்மன் பொட்டல் தெரு நிர்வாகிக்கு அழைப்பு விடுக்க வில்லை என அத்தெருவை சேர்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
336 வது சித்திரை வெண்குடை திருவிழா
மேலும் அவர்களிடம் டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்நிலையில் இன்று சித்திரை முதல் நாள் என்பதால் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தேவேந்திர குல வேளாளர் ஏழு தெரு சமூகத்தினர் ஒன்று சேர்ந்து 336 வது ஆண்டு வெண்குடை திருவிழாவை நடத்தினார்கள். வழக்கமாக இந்த திருவிழாவில் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் கொண்டாடப்படும்.

இந்த முறையும் விழா கமிட்டி சார்பாக சீனிவாசன் புது தெருவில் பொது சாவடியில் இருந்து மேளதாளத்துடன் நீர் காத்த அய்யனார் சுவாமி அலங்கார வளைவு சீனிவாசன் புது தெரு, ஆனையூர் தெரு, மாடசாமி கோவில் தெரு, அம்மன் பொட்டல் தெரு, மத்திய வடக்கு தெரு வழியாக காமாட்சி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள விஸ்வகர்மா சமூக ஊர் மரியாதை பெற்று, பெரிய கடை பஜார் வழியாக பொன்விழா மைதானத்தில் இருந்து மேற்கு முடங்கிய சாலை வழியாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள நீர் காத்த அய்யனார் சுவாமி கோவில் சாமி தரிசனம் செய்யப்பட்டது.

விருதுநகர்: எக்கலா தேவி அம்மன் கோயில் திருவிழா - பூக்குழி இறங்கிய பக்தர்கள்

வெண் குதிரையில் சுவாமி வீதி உலா

அதன் பிறகு மாலை தாலுக்கா அலுவலகம் அருகில் வாழவந்தான் கோவிலில் சாமி தரிசனம் செய்யப்பட்டது. மேலும் சீனிவாசன் புது தெரு சாவடிக்கு வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து இந்த விழாவில் அலங்கரிக்கப்பட்ட அய்யனார் சுவாமி வெண் குதிரையில் ஏறி உலா வர சப்பரத்தின் காலில் சதங்கை அணிந்த நபர் வெண்குடையுடன் நடனமாடிய படி ஊர்வலமாக வந்தனர்.

போக்குவரத்து மாற்றம்
மேலும் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஆழி பொம்மை ஆட்டம், தப்பாட்டம் போன்ற நடனங்களும் கேரளா செண்டை மேல குழுவினரும் ஊர்வலமாக வந்தனர். மேலும் இந்த விழா ஏற்பாடுகளை தேவேந்திர குல வேளாளர் சமூக சீனிவாசன் புது தெரு நிர்வாகிகள் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை துணைப்போலி சூப்பிரண்டு ப்ரீத்தி தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 850-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காந்தி சிலை முதல் மதுரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு. டிபி மில்ஸ் சாலை ரயில்வே பீட்டர் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி