ஆப்நகரம்

விருதுநகர்: அருகில் வந்துவிட்ட கொரோனா... அச்சத்தில் காவலர்கள்

30 பேர் பணீபுரியும் காவல்நிலையத்தில் 2 பெண் காவலர்கள் 3 ஆண் காவலர்கள் உட்பட 5 காவலர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியானது.

Samayam Tamil 4 Jul 2020, 12:09 am
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 5 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவலர்கள் அச்சமடைந்துள்ளனர்.
Samayam Tamil corona image


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதுவரை பொதுமக்கள் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காவலர்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட
நிலையில் காவலர்கள் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் கொரோனா தொற்று பிற காவலர்களுக்கு பரவாமல் இருக்க நத்தம்பட்டி காவல் நிலையம் மூடப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் 30 க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு குன்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இன்று பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில் 2 பெண் காவலர்கள் 3 ஆண் காவலர்கள் உட்பட 5 காவலர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியானது.

ஒரே காவல் நிலையத்தில் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட சம்பவம் பிற காவலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி