ஆப்நகரம்

பரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி பலி; வயிற்றில் இருந்த 2 சிசுக்களும் சாவு!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வயிற்றுவலி காரணமாக கர்ப்பிணி உயிரிழந்தார். மேலும் அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 Dec 2021, 5:42 pm

ஹைலைட்ஸ்:

  • பரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி பலி
  • வயிற்றில் இருந்த 2 சிசுக்களும் சாவு
  • விருதுநகர் மாவட்ட மக்கள் சோகம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பரோட்டா
பரோட்டா
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள வதுவார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனந்தாயி. இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அனந்தாயியை கூடுதல் கவனம் செலுத்தி அவரது கணவர் கவனித்து வந்துள்ளார். அனந்தாயிக்கு அடிக்கடி பரோட்டா சாப்பிடும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அங்குள்ள சாலையோர கடை ஒன்றில் இருந்து அடிக்கடி அவரது கணவர் பரோட்டா வாங்கி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அனந்தாயிக்கு பரோட்டா சாப்பிட ஆசையாக இருந்துள்ளது. உடனே சாலையோரத்தில் உள்ள கடைக்கு சென்று, அவரது கணவர் பரோட்டா வாங்கி வந்து கொடுத்துள்ளார்.

Breaking News: ரேஷன் கார்டு; அதிரடி தகவல் வெளியானது!

ஆசையாக பரோட்டாவை சாப்பிட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு சிறிது நேரத்தில் கடும் வயிற்று வலி ஏற்பட்டு துடித்துள்ளார். இதனால் அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் இன்றி அனந்தாயி இறந்தார். மேலும் அவர் வயிற்றில் இருந்த 2 குழந்தைகளும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஜெயலலிதா சொந்தம் நாங்கள் தான்; புதிய அஸ்திரம் எடுத்த ஜெய் ஆனந்த்!

இதையடுத்து அவரது உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் முழுமையான அறிக்கைக்கு பிறகே மரணத்திற்கான காரணம் குறித்து தெரிய வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

பரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது வயிற்றில் இருந்த இரு சிசுக்கள் உயிரிழந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி