ஆப்நகரம்

ஏலியன் கொரோனா: உச்சக்கட்ட பீதியில் விருதுநகர் மக்கள்!

சுற்றுலாத் தலங்களில் ஏலியன் வேடம் அணிந்து கொரோனா விழிப்புணர்வு செய்த சமூக ஆர்வலரின் செயல் மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Apr 2021, 7:29 am
தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலை பரவியதையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த சூழலில் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil எலியன் கொரோனா: உச்சக்கட்ட பீதியில் விருதுநகர் மக்கள்!


இதற்கிடையே கொரோனா தடுப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேரடி தெருவைச் சேர்ந்த முனியராஜ் என்பவர் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் நலன் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் கன்னியாகுமரி சுற்றுலாத் தலங்களில் ஏலியன் வேடமணிந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா மரணம்: என்ன அடுத்து?

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் இடையே முககவசம் மற்றும் கிருமிநாசினிகள் கொடுத்து அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

இவர் குதிரையில் சென்றும் நடந்து சென்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கொரோனாவின் தாக்கம் மீண்டும் தீவிரமெடுக்கும் இப்போதைய சூழலில், விருதுநகர் சமூக ஆர்வலர் முனியராஜ் பிரச்சாரம் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி