ஆப்நகரம்

சதுரகிரி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சதுரகிரி பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 4 Dec 2021, 4:05 pm
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்.
Samayam Tamil சதுரகிரி கோயில்
சதுரகிரி கோயில்


இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசைக்கு 4 நாட்கள் பிரதோஷத்திற்கு 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழையின் காரணமாகவும் நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு கார்த்திகை மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசை முன்னிட்டு கடந்த 2 ஆம் தேதி முதல் நாளை வரை ஆகிய 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சென்று தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மரணத்தின் விளிம்பில் சிறுவன்; கருணை காட்டுவாரா முதல்வர்?

இந்நிலையில் இன்று அமாவாசை என்பதால் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பினர்.

அடுத்த செய்தி