ஆப்நகரம்

விருதுநகர் புத்தகத் திருவிழாவில் தொலைந்த 4 வயது சிறுமி; மடியில் வைத்து சமாதானப்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்த கலெக்டர்!

விருதுநகர் புத்தகத் திருவிழாவில் தொலைந்த நாலு வயது சிறுமியை மாவட்ட ஆட்சியர் சமாதானப்படுத்தி, காவல் துறை உதவியுடன் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 26 Nov 2022, 11:27 am

ஹைலைட்ஸ்:

  • விருதுநகர் புத்தகத் திருவிழாவில் தொலைந்த 4 வயது சிறுமி
  • தனியாக நின்று அழுது கொண்டிருந்த சிறுமியை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்ற காவல்துறையினர்
  • பெற்றோரை கண்டுபிடித்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்த 4 வயது சிறுமி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil புத்தகத் திருவிழாவில் தொலைந்த 4 வயது சிறுமி
புத்தகத் திருவிழாவில் தொலைந்த 4 வயது சிறுமி
விருதுநகரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கூட்டத்தில் தொலைந்த 4 வயது சிறுமியை மாவட்ட ஆட்சியர் சமாதானப்படுத்தி, பெற்றோரை கண்டுபிடித்து குழந்தையை ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட்டதன் பேரில் குழந்தை பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தகவாசிப்பு முக்கிய பங்குவகிக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தினை ஊக்கப்படுத்த வேண்டும். புத்தகவாசிப்பினை ஒருமக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தகக் காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், இலக்கிய சிந்தனைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என அறிவித்தார்கள்.


அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து, விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொருட்காட்சி மைதானத்தில் 17.11.2022 முதல் 27.11.2022 வரை 11 நாட்களுக்கு காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மாபெரும் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

இந்த புத்தக கண்காட்சி அனைத்து தரப்பட்ட மக்களிடமும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மாலை வேளைகளில் புத்தக திருவிழாவை காண்பதற்காக பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. புத்தகத் திருவிழாவில் கூட்டத்தில் நான்கு வயது சிறுமி பெற்றோரை காணாமல் தனியாக நின்று அழுது கொண்டிருந்த நிலையில் அதை கண்ட காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் குழந்தையை விசாரித்து குழந்தையை மாவட்ட ஆட்சியரிடம் மேடைக்கு அழைத்து வந்தனர்.

திருவாரூரில் 28ம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டம்; ரயில் பயணிகளுக்கு வந்த முக்கிய அறிவிப்பு!

மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாத ரெட்டி அந்த குழந்தையை தனது மடியில் அமர வைத்து குழந்தைக்கு குடிக்க நீர் மற்றும் பிஸ்கட் கொடுத்து குழந்தையிடம் ஆறுதலாக பேசி குழந்தையின் பெற்றோர் மற்றும் ஊர் குறித்து விசாரித்தார்.

இதை அடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனாவிடம் குழந்தையின் பெற்றோரை கண்டுபிடித்து ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவுரை வழங்கினார். பின்பு காவல் துறையினர் குழந்தையின் பெற்றோரான விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியைச் சார்ந்த சசிக்குமார் - நந்தினி தம்பதியினரிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி