ஆப்நகரம்

650 கிராம் எடையில் பிறந்த பெண் குழந்தை!

விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 650 கிராம் எடையில் பிறந்த பெண் குழந்தை 43 நாள்கள் சிகிச்சைக்கு பின்பு நலமுடன் வீடு திரும்பியது

Samayam Tamil 5 Jun 2020, 7:24 pm
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த இசைத்துறை - ரத்தினம் தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி 650 கிராம் எடை கொண்ட பெண் குழந்தை பிறந்தது.
Samayam Tamil எடை குறைவான குழந்தை
எடை குறைவான குழந்தை


மிகவும் எடை குறைந்த அந்த குழந்தைக்கு அரசு மருந்துவர்கள் கடந்த 43 நாள்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து, அக்குழந்தை தற்போது 950 கிராமாக எடை உயர்ந்துள்ளது. தொடர்ந்து, தற்பொழுது பூரண குணம் அடைந்த அக்குழந்தையும், தாயும் இன்று வீடு திரும்பினர். அவர்களை அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் மகிழ்ச்சியாக வழி அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் ஆறாவது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..!

மிகக் குறைந்த எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு விருதுநகர் மாவட்ட மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி