ஆப்நகரம்

சிகிச்சை பலனின்றி பெண் மரணம்: போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்!

ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற மறியலால் நான்கு திசைகளிலும் மூன்று கிலோமீட்டர் அளவிற்கு வாகனங்கள் தேங்கி நின்றன.

Samayam Tamil 19 Sep 2020, 11:30 pm
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இறந்த பெண்ணின் உடலை தராததால் ஆத்திரத்தில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
Samayam Tamil srivilliputhur


ஸ்ரீவில்லிபுத்தூர் கீழப்பட்டி தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்- காளீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தொடர்ந்து கடந்த வருடம் கர்ப்பம் தரித்த காளீஸ்வரி பிரசவத்திற்காக நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரசவம் நடைபெற்றதை தொடர்ந்து பெண் குழந்தை பிறந்தது.

தொடர்ந்து தாயின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.மதுரை அரசு மருத்துவமனையில் காளீஸ்வரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். அதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக காளீஸ்வரி உடல் பிணவரையில் வைக்கப்பட்டது.

ஸ்டாலின் போன்று விவசாயத்தை பற்றி அறியாதவன் அல்ல: விவசாய மசோதாவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதாரவு!

மோகன்ராஜ்- காளீஸ்வரி தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் நிறைவு பெறாததால் கோட்டாட்சியர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடைபெற வேண்டும் என்ற நிலையில் மதுரை கோட்டாட்சியர் பிரேத பரிசோதனையை ஞாயிற்றுக்கிழமை அன்று வைத்துக்கொள்ளலாம் என்று கூறியதன் பேரில் மதுரை மருத்துவர்கள் நாளை தான் காளீஸ்வரியின் உடல் கிடைக்கும் என உறவினர்களிடம் தெரிவித்தனர்.

இத்தகவல்களை அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள காளிஸ்வரியின் உறவினர்கள் ஆண்கள் - பெண்கள் உட்பட சுமார் 100 க்கும் மேற்பட்டோர் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்ச் பாயிண்ட் என்ற நான்கு முக்கு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிவகாசி: மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

காவல்துறையினர் சமாதானம் செய்தும் சமாதானத்தை ஏற்காத உறவினர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இறந்த பெண்ணின் உறவினர்களின் சாலை மறியலால் நான்கு திசைகளிலும் 3 கிலோ மீட்டர் அளவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுமார் ஒரு மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அடுத்த செய்தி