ஆப்நகரம்

பசி, பட்டினியுடன் பரிதவிக்கும் பேண்ட் செட் இசைக்குழுவினர்!

முழு முடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பேண்ட் செட் இசைக்குழுவினர் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 10 May 2020, 1:49 pm
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றியுள்ள சத்திரப்பட்டி, தளவாய்புரம், முகவூர் சொக்கநாதன்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட பேண்ட்செட் இசைக்குழு குழுவினர் உள்ளனர்.

குழுவிற்கு 10 பேர் வீதம் கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்டவர்கள் இந்த தொழிலை நம்பியுள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவு காரணமாக சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் இதனை நம்பியுள்ள இசைக் கலைஞர்கள் வேலையின்றி வாழ்வாதாரம் இழந்து வறுமை நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில், தங்களது இன்னலை எடுத்துரைக்கும் விதமாக ஸ்ரீமாயூரநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட பேண்ட் செட் இசை கலைஞர்கள் இசைக்கருவிகளை இசைத்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

வாட்டி எடுக்கும் வெயிலும், போட்டுத் தாக்கப் போகும் மழையும் - தமிழ்நாடு வானிலை நிலவரம்!

இந்தத் தொழிலை நம்பியே தங்களது குடும்பம் உள்ளது. தற்போது வேலையில்லாததால் தங்களது குடும்பத்தினர் பசி பட்டினியுடன் வாழ்வதால் தமிழக அரசு நிவாரணம் வழங்கி தங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் என முதலமைச்சருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி