ஆப்நகரம்

கஜானாவில் 4 லட்சம் கோடி கடனுக்கான துண்டுச்சீட்டு... அதிமுகவை விளாசிய அமைச்சர்!

கஜானாவில் பணம் இருக்கும் என நினைத்து அத்தனையும் அறிவித்துவிட்டோம். ஆனால் கஜானாவை திறந்தால் ரூ 4 லட்சம் கோடிக்கு கடன் உள்ளது என்ற துண்டு சீட்டுதான் இருந்தது என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 23 May 2022, 6:04 pm

ஹைலைட்ஸ்:

  • கஜானாவில் பணம் இருக்கும் என நினைத்து அத்தனையும் அறிவித்துவிட்டோம்
  • கஜானாவை திறந்தால் ரூ 4 லட்சம் கோடிக்கு கடன் உள்ளது என்ற துண்டு சீட்டுதான் இருந்தது
  • திமுகவின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பேச்சு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
கஜானாவில் பணம் இருக்கும் என நினைத்து அத்தனையும் அறிவித்துவிட்டோம். ஆனால் கஜானாவை திறந்தால் ரூ 4 லட்சம் கோடிக்கு கடன் உள்ளது என்ற துண்டு சீட்டுதான் இருந்தது என விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நேருமைதானத்தில் நடைபெற்ற திமுக ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் பேசியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ம் அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், 15வது அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு மற்றும் நகர மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினருக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடைபெற்றது.


கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது: "திமுக ஆட்சி நல்ல ஆட்சி. திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் இல்லை. முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து 20 ஆண்டுகள் முதல்வராக இருப்பார். திமுகவை எதிர்க்க கூட ஆள் இல்லை. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களை கூட அறிவிக்கவில்லை. அவர்களுக்குள் குடுமிப்பிடி சண்டை நடக்கிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திமுக ஆட்சி வெளிப்படையான ஆட்சி. கஜானாவில் பணம் இருக்கும் என நினைத்து அத்தனையும் அறிவித்துவிட்டோம். ஆனால் கஜானாவை திறந்தால் ரூ 4 லட்சம் கோடிக்கு கடன் உள்ளது என்ற துண்டு சீட்டுதான் இருந்தது. கடந்த ஒரு வருடமாக இக்கட்டான சூழலில் ஆட்சி நடந்தது.

இந்தியாவின் முதன்மை மாநிலம் தமிழகம்தான். இல்லத்தரசிகளுக்கு விரைவில் மாதம் ரூ. 1000 வழங்கப்படும். அருப்புக்கோட்டையில் விரைவில் தினந்தோறும் தாமிரபரணி குடிநீர் வழங்கப்படும்.‌ அரசு மருத்துவமனை விரைவில் ரூ. 50 கோடி செலவில் புதுப்பிக்கப்படும். தொகுதியில் மக்களுக்கு அனைத்து வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்றப்படும்" இவ்வாறு தெரிவித்தார்.

விருதுநகரில் பெண்களுக்கான சிலம்பம் போட்டி... அமைச்சர் கொடுத்த அசத்தல் துவக்கம்..!

கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், ஒன்றியக்குழு தலைவர் சசிகலா பொன்ராஜ், நகர மன்ற உறுப்பினர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், நகர மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி