ஆப்நகரம்

இனிமே கூட்டத்தில் அலைமோத வேண்டாம்.. அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் அதிரடி!

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் நியாய விலைக் கடையை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் திறந்து வைத்தார்‌.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 4 Oct 2022, 2:20 pm

ஹைலைட்ஸ்:

  • அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் நியாய விலைக் கடை
  • கூடுதல் நியாய விலைக் கடையை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
  • அத்தியாவசிய பொருட்களின் இருப்பு நிலவரம் குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் நியாய விலைக் கடையை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.‌
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ராமலிங்கா நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் 2,400 திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் இருந்ததால் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. பொதுமக்கள் நீண்ட நேரம் நிற்கும் சூழல் ஏற்பட்டது‌ இந்நிலையில் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் பாளையம்பட்டி இராமலிங்கா நகர் விரிவாக்க பகுதியில் கூடுதலாக நியாய விலை கடை திறக்கப்பட்டுள்ளது.

கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சரஸ்வதி சிறப்பு பூஜை; பக்தர்களுடன் முன்னாள் அமைச்சர் காமராஜ் சாமி தரிசனம்!

இந்த நியாய விலை கடையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் எத்தனை கார்டுதாரர்களுக்கு இங்கு பொருட்கள் வழங்கப்படுகிறது, அத்தியாவசிய பொருட்களின் இருப்பு நிலவரம் குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியின் போது கூட்டறவு துறை அதிகாரிகள், ஒன்றிய, திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி