ஆப்நகரம்

சட்டம் கடுமையாக பாயும்... அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!

கோவில் நிலங்களை கையகப்படுத்த நினைப்பவர்கள் மீது சட்டம் கடுமையாக பாயும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 14 Jun 2022, 11:44 am

ஹைலைட்ஸ்:

  • ஸ்ரீவில்லிபுத்தூரில் இனிவரும் காலங்களில் தேர் திருவிழாக்களில் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்
  • கோவில் நிலங்களை கையகப்படுத்த நினைப்பவர்கள் மீது சட்டம் கடுமையாக பாயும்
  • இந்து அறநிலையத்துறை அமைச்சர் எச்சரிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இனிவரும் காலங்களில் தேர் திருவிழாக்களில் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோவில் நிலங்களை கையகப்படுத்த நினைப்பவர்கள் மீது சட்டம் கடுமையாக பாயும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசின் இலச்சினையாக விளங்கும் கோபுரம் அமைந்துள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலில் புதிதாக பதவியேற்ற தமிழக அரசின் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு முதல் முறையாக வருகை தந்து கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.


தெப்பத்திருவிழா நடக்கும் திரு முக்குலத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை சரி செய்து விரைவில் அங்கு தெப்பத் திருவிழா நடக்க ஏற்பாடு செய்யப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து முதலமைச்சர் அறிவித்த அறிவிப்பின் அடிப்படையில் நாளை குலசேகரபட்டினம் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் 108 விளக்கு பூஜை நடைபெறும் என தெரிவித்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும் பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், இனி வரும் காலங்களில் தமிழகத்தில் நடைபெறும் தேர் திருவிழாக்களில் இது போன்ற அசம்பாவிதம் நடக்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை ஆக்கிரமித்திருக்கும் நபர்கள் யாராயினும் அவர்கள் உடனே அப்புறப்படுத்தப்பட்டு அந்த இடங்கள் சம்பந்தப்பட்ட கோவிலின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

youtube பார்த்து தங்கம் வென்ற ஸ்ரீவில்லிபுத்தூர் சகோதரிகள்.. குவியும் பாராட்டுகள்!

மேலும் ஆதினங்கள் மடாதிபதிகளுக்கு தமிழக அரசு உரிய மரியாதை அளித்து வருவதாகவும் அதில் ஏதும் குறைபாடு இருந்திருந்தால் இனிவரும் காலங்களில் அது சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் எனப்படும் புண்ணிய ஸ்தலத்தில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி