ஆப்நகரம்

அரசு விழா: பாதியிலேயே கோபமாக வெளியேறிய அமைச்சர்!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்ட அரசு விழாவில் வேறு ஒரு பிரச்சினைக்காக பொதுமக்கள் அவரை சூழ்ந்துகொண்டு வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த அமைச்சர் நிகழ்ச்சியின் பாதியிலேயே புறப்பட்டு சென்றது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Jun 2020, 9:58 am
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வத்திராயிருப்பை தாலுகாவாக அறிவித்து, சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து புதிதாக உதயமான வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வத்திராயிருப்பு பேருந்து நிலையம் அருகே மூன்றரைக் கோடி ரூபாயில் சுமார் 12,000 சதுர அடி பரப்பளவில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா, பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பூமி பூஜையை முறைப்படி துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து புதிதாக அமைக்கப்படவுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தின் வெளிப்பகுதியில் மரம் நடுவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொரோனா: சதுரகிரி மலையில் உணவின்றி தவிக்கும் 'வாயில்லா ஜீவன்கள்'

இதற்கிடையே, புதிதாக அமைய உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஒரு பிரிவினர் தங்கள் சமுதாய கோவிலை கட்டி வந்துள்ளனர். அவ்வாறு கோவில் கட்டும் போது பல லட்சம் மதிப்பிலான சுமார் 20 சென்ட் அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி