ஆப்நகரம்

வேரோடு சாய்ந்த வேப்பமரம்... ஹைவேயில் டிராஃபிக் ஜாம்!

சாத்தூர் நகராட்சிக்கு சொந்தமான சொக்கலிங்கம் பூங்கா அருகில் இருந்த 60 ஆண்டுகள் பழமையான மரம் சூறாவளி காற்றில் வேரோடு சாய்ந்தது.

Samayam Tamil 14 May 2021, 9:21 pm

ஹைலைட்ஸ்:

  • சாத்தூரில் சொக்கலிங்கம் பூங்கா உள்ளது.
  • பூங்கா அருகே வேப்பமரம் வேரோடு சாய்ந்தது.
  • சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil வேரோடு சாய்ந்த வேப்பமரம்
சாத்தூரில் வீசிய சூறாவளி காற்றில் வேரோடு சாய்ந்த வேப்ப மரம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வைப்பாற்றின் கரையில் நகராட்சிக்கு சொந்தமான சொக்கலிங்கம் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பழமையான மரங்கள் நிறைந்துள்ளன.
சாத்தூரில் நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியத. இதனால் சாலையின் ஓரத்தில் இருந்த சுமார் 60 ஆண்டுகால பழமையான வேப்ப மரம் வேரோடு சாய்ந்து தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டின் குறுக்கே விழுந்தது

இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

அடுத்த செய்தி