ஆப்நகரம்

சமூக இடைவெளியின்றி நடைபெற்ற திமுகவினரின் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி!!

சாத்தூர் பகுதியில் திமுக நிவாரணப் பொருள்கள் வழங்கிய போது தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை.

Samayam Tamil 11 May 2020, 8:05 am
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் டீ கடையில் வேலை செய்து வருபவர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், புகைப்படக் கலைஞர்கள் போன்றோருக்கு, திமுக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. அரிசிப்பை, காய்கறித் தொகுப்பு உள்ளிட்டவற்றை முன்னாள் அமைச்சரும், அருப்புக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் KKSSRR வழங்கினார்.
Samayam Tamil சமூக இடைவெளியின்றி நடைபெற்ற திமுகவினரின் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி


டீக்கடை தொழிலாளர்கள் 100 பேருக்கும், (முடி திருத்துவோர்) சலூன் கடை தொழிலாளர்கள் 70 பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் 150 பேருக்கும், புகைப்படக் கலைஞர்கள் 50 பேருக்கும் என சுமார் 370 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், நகரத் தலைவர் குருசாமி, திமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

கொரோனா: தமிழ்நாட்டின் தற்போதைய நிலை என்ன?

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களில் அதிகமானோர் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா குறித்த விழிப்புணர்வு இருக்கும்பட்சத்தில் நோய்தொற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை பொதுமக்கள் எப்பொழுது புரிந்து கொள்வார்களோ என்று சமூக ஆர்வலர்கள் கவலையுடன் கேள்வியெழுப்புகின்றனர்.

அடுத்த செய்தி