ஆப்நகரம்

வருவாய்த்துறை அமைச்சர் வீட்டுத் தெரு ரேஷன் கடையில் முறைக்கேடு!

விருதுநகர் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இல்லம் அருகே உள்ள நியாயவிலைக்கடையில் 14 வகைப் பொருட்கள் வழங்குவதில்லை எனப் பொதுமக்கள் நியாயவிலைக்கடையை முற்றுகையிட்டனர்.

Samayam Tamil 22 Jun 2021, 4:43 pm
தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பாக நியாயவிலைக்கடைகளில் 14 வகையான பொருட்கள் கொரோனோ கால நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Samayam Tamil வருவாய்த்துறை அமைச்சர் வீட்டுத் தெரு ரேஷன் கடையில் முறைக்கேடு!


இதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் பொருட்கள் விநியோகம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சூழலில் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இல்லம் அமைந்துள்ள ராமமூர்த்தி சாலையில் உள்ள நியாயவிலைக்கடையில் முறைக்கேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராமமூர்த்தி தெருவில் உள்ள எண் 6 நியாயவிலைக்கடையில் 14 வகைப் பொருட்களில் சிலவற்றைக் காணவில்லை என நூறுக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தாயில்பட்டி வெடி விபத்து: 3 வீடுகள் தரைமட்டம், 5 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி!
குறிப்பிட்ட நியாயவிலைக் கடை முன் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் பொதுமக்களைச் சமாதானப்படுத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தது அவர்களைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அமைச்சர் வீட்டருகே உள்ள நியாயவிலைக்கடையில் நடந்துள்ள இந்த சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அடுத்த செய்தி