ஆப்நகரம்

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணி... நடவடிக்கை எடுக்குமா விருதுநகர் நகராட்சி?

விருதுநகர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 25 Mar 2023, 11:50 am
விருதுநகரில் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் கையுறை உள்ளிட்ட எந்த பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவுநீர் சாக்கடையை சுத்தப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக நகராட்சி தூய்மை பணியாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
Samayam Tamil municipality workers
தூய்மை பணியாளர்களின் அவலநிலை


தூய்மை பணியாளர்கள்
விருதுநகர் நகராட்சியின் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த மாதவன் என்பவர் இருந்து வருகிறார். இந்நகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் ஒவ்வொரு நாளும் தினமும் காலையில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கோவை மெட்ரோ திட்ட பணிகள் விரைவில் தொடங்கும்-அமைச்சர் செந்தில் பாலாஜி
கனமழை
விருதுநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்தது இந்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் செல்லும் வாருகால்களில் கழிவு நீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

சீரமைக்கும் பணி
இந்நிலையில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே கன மழை பெய்ததன் காரணமாக நகராட்சி தூய்மை பணியாளர்கள் வாருகாலில் உள்ள அடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்..
Sivakarthikeyan: விஜய் பாணியை கையிலெடுக்கும் எஸ்கே: தரமான சம்பவம் லோடிங்..!
பாதுகாப்பு உபகரணங்கள்
அப்போது நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு விருதுநகர் நகராட்சி நிர்வாகம் சார்பாக எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படாத நிலையில் வருகால் அடைப்பை சீரமைப்பதற்கு கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் அணியாமல் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோரிக்கை
இதனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களுக்கு கை, மற்றும் கால்களில் அணிய தேவையான பாதுகாப்பு உபகரணங்களை தந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி