ஆப்நகரம்

சரியான மழை: விருதுநகர் கிராமங்களில் வெள்ள நீர்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அக்னி நட்சத்திர நாளன்று பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Samayam Tamil 6 May 2021, 11:40 pm
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாகக் கடந்த 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமானது.
Samayam Tamil சரியான மழை: விருதுநகர் கிராமங்களில் வெள்ள நீர்!


இந்த சூழலில் இன்று காலை முதலே அதிகமான வெயில் அடித்தது. பின்னர் மதியம் வேளையில் பரவலாக ஆரம்பித்த மழை விட்டுவிட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பெய்தது. தொடர்ந்து அது கனமழையாகப் பதிவாகியது.

சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான அமீர் பாளையம் சத்திரப்பட்டி, சடையம்பட்டி, படந்தால், இருக்கன்குடி, கொல்லப்பட்டி, அய்யம்பட்டி, அணைக்கரைப்பட்டி, ராமலிங்கபுரம், வாழவந்தாள்புரம் உள்பட பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகத் தெருக்களில் வெள்ள நீர் ஓடியது.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் லாரி கவிழ்ந்து 6 டயர்கள் கழன்று ஓடி பெரும் விபத்து!

வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது. சிறுவர்களும் தெருக்களில் மழைநீரில் ஓடி ஆடி விளையாடி மகிழ்ந்தனர். கோடையில் அக்னி நட்சத்திர நாட்களில் மழை பெய்தது பொது மக்களுக்குப் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி