ஆப்நகரம்

ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் தொடக்கம்

கோவில் பட்டர்கள் பல்லக்கை ஊஞ்சல் போல் ஆட்டி அசைத்து கோவிலின் மேல் தளத்தில் உள்ள பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்தவாறு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

Samayam Tamil 31 Oct 2020, 11:23 pm
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிவில் ஐப்பசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு பெரிய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊஞ்சல் உற்சவம் புறப்பாடு நடைபெற்றது..
Samayam Tamil ஆண்டாள் உற்சவம்


ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலுடன் இணைந்த வடபத்ரசாயி பெருமாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும்.இங்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு இன்று இரவு உற்சவர் பெரிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்புப் பூஜைகள் நடைபெற்று ஸ்ரீ பெரிய பெருமாளின் புறப்பாடு நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெரிய பெருமாளை கோவில் பட்டர்கள் பல்லக்கை ஊஞ்சல் போல் ஆட்டி அசைத்து கோவிலின் மேல் தளத்தில் உள்ள பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்தவாறுகோவில் பட்டர்கள் பல்லக்கை ஊஞ்சல் போல் ஆட்டி அசைத்து கோவிலின் மேல் தளத்தில் உள்ள பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்தவாரு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கோஷ்டியினரால் திருப்பாவை பாரசுரங்கள் பாடப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

அடுத்த செய்தி