ஆப்நகரம்

Elephants camp: முகாமிலிருந்து கோயில் வந்து சேர்ந்தாள் ஜெயமால்தயா

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானையை தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் இருந்து ஆண்டாள் கோவிலுக்கு வந்தது.

Samayam Tamil 4 Mar 2021, 5:39 pm
தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் கடந்த 8 ஆம் தேதி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி பகுதியில் தொடங்கியது.
Samayam Tamil jeyamalyatha


இந்நிலையில் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் ,தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் யானை ஜெயமால்யதாவை யானை பாகன் வினில்குமாரும் அவரது உதவி பாகனும் அடித்து துன்புறுத்துவது போல் சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வீடியோ காட்சிகள் தொடர்ந்து வலம் வந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட அறநிலைதுறை அதிகாரிகள் தரப்பில் யானைப்பாகன் முன்னுக்குப் பின்னாக பதில் தெரிவித்ததால் திருக்கோயில் நிர்வாகத்தால் யானைபாகன் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.பின்னர் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி யானைபாகன்கள் வனத்துறையினரால் கைது செய்யப்ட்டு சிறையில் அடைக்கபட்டனர்.

அதிமுக எனக்கு சீட் கொடுக்கும்: எம்.ஜி.ஆர். பேரன் நம்பிக்கை

ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதாவை திருச்செந்தூர் கோவில் யானையின் உதவி பாகன் சுப்பிரமணியம் பராமரித்து வந்தார். இந்நிலையில் அப்பாகனின் அரவனைப்பில் ஆண்டாள் கோவில் யானையை தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் இருந்து புறப்பட்டு இன்று வாகனத்தில் ஏற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்தடைந்தது.யானைக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் செய்து கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளித்தனர்.

அடுத்த செய்தி