ஆப்நகரம்

கலெக்டர் போட்ட கடிவாளம்; ஆடிப்போன அதிகாரிகள்!

கலெக்டர் போட்டுள்ள புதிய கடிவாளத்தை பார்த்து அரசு அதிகாரிகள் ஆடிப்போய் கிடக்கின்றனர்.

Samayam Tamil 19 May 2022, 6:40 pm
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
Samayam Tamil விருதுநகர் கலெக்டர்
விருதுநகர் கலெக்டர்


விருதுநகர் மாவட்டத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் பிரிவு 27(1)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு, இந்த திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, குறைதீர்ப்பு அதிகாரியாக மாணிக்பிரபு என்பவர் கடந்த 04.04.2022 அன்று விருதுநகர் மாவட்டத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

இவர், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களிடம் இருந்து வரும் புகார்களை பெற்று பரிசீலித்து உடனுக்குடன் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன் நீக்கம்?; முதல்வரை சந்தித்ததால் எடப்பாடி கோபம்!

மேலும் அது தொடர்பாக பிரச்சினைகள் நடக்கும் இடத்திற்கே சென்று மாணிக் பிரபு விசாரணை மேற்கொள்வார். அதேபோல் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பிற புகார்கள் மீதும் நடவடிக்கைகள் மேற்கொள்வார்.

மேலும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் தங்களின் புகார்களை மனுக்களாக குறைதீர்ப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர் என்ற முகவரிக்கும் மற்றும் ombudsperson.vnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

திமுக நிழல்...பேரறிவாளனுக்கு எதிர்ப்பு; காங்கிரஸ் செய்யும் பலே தில்லாலங்கடி!

எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைபாடு இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் வகையில் பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் விருதுநகர் மாவட்டத்தின் குறைதீர்ப்பு அதிகாரியான மாணிக் பிரபு என்பவரை 9442405699 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி