ஆப்நகரம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ... பற்ற வைத்தது யார்?

இந்த காட்டுத் தீயினால் அரியவகை மூலிகை செடிகள் எரிந்து நாசமாயின. மேலும் வனவிலங்குகள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Jul 2020, 2:21 pm
இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ தீயை அணைக்கும் பணியில் வனத்துறை தீ தடுப்புக் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
Samayam Tamil மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை சேத்தூர் வனப்பகுதி பிராவடியான் பீட் பகுதியில் காட்டுத்தீ சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு தீ எரிந்து கொண்டிருப்பதால் தீயை அணைக்கும் பணியில் 12 தீ தடுப்பு வனத்துறை காவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ மளமளவென பரவி வருகிறது. காற்றில் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.



தமிழகத்தைப் பொறுத்தவரை மேற்குத்தொடர்ச்சி மலை மூலிகைகளின் கருவூலமாகப் பார்க்கப்படுகிறது. இந்த காட்டுத் தீயினால் அரியவகை மூலிகை செடிகள் எரிந்து நாசமாயின. மேலும் வனவிலங்குகள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தீப்பாற்றல் சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தானாகப் பற்றியதா அல்லது வேறு யாரும் உள்நோக்கத்துடன் கொளுத்தினரா என்ற நோக்கத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி