ஆப்நகரம்

மழைக்காலத்தில் ஏன் வேப்பிலையும் பட்டையும் சேர்த்து முகத்தை கழுவ வேண்டும் தெரியுமா?

மழைக்காலத்தில் ஏற்படும் பருக்கள், சரும அழற்சி, சரும வறட்சி, சரும வடுக்கள் போன்ற பல தொல்லைகளை களைய வேப்பிலை இருந்தால் மட்டும் போதும். வேப்பிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்தலாம் என அறிவோம்.

Samayam Tamil 5 Dec 2022, 11:12 am
மழைக்காலத்தில் சரும பராமரிப்பு என்பது மிகவும் கஷ்டமான விஷயம் ஆகும். காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக மக்கள் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். மழைக்காலத்தில் சரும அழற்சி, பருக்கள் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது.
Samayam Tamil beauty benefits of neem face wash during monsoon in tamil
மழைக்காலத்தில் ஏன் வேப்பிலையும் பட்டையும் சேர்த்து முகத்தை கழுவ வேண்டும் தெரியுமா?


​ சரும அழகை மேம்படுத்த வேப்பிலை

உங்களை சுற்றியுள்ள காற்றில் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. பூஞ்சை தொற்று,சரும வடுக்கள் போன்ற பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். மழைக்காலத்தில் கைகள், முதுகின் மேல் பகுதி, உச்சந்தலை, தொடைப்பகுதிகளில் வலி மற்றும் வீக்கம், சிறு கொப்பளங்கள் ஏற்படலாம். இது போன்ற மழைக்கால சரும பிரச்சனைகளை போக்க வேப்பிலை சிறந்த ஒன்றாகும்.

வேப்பிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் நம்முடைய சரும அழகை மேம்படுத்த உதவுகிறது.

​வேப்பிலையின் சரும பயன்கள் :

வேப்பிலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும பிரச்சனைகளை ஓரங்கட்டுகிறது. வேப்பிலை சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும். முகத்தில் இருந்து வடுக்கள், பருக்கள், சரும கோடுகள் மற்றும் சருமம் வயதாகுதல் போன்ற பிரச்சினைகளை போக்குகிறது. சருமத்திற்கு ஈரப்பதத்தையும் கோடை காலத்தில் குளிர்ச்சியையும் தருகிறது. சரும துளைகளை ஆழமாக சுத்தம் செய்ய உதவுகிறது.

​வேப்பிலை பேஷ் வாஷ்

இந்த வேப்பிலை பேஷ் வாஷை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். 10-15 வேப்பிலையுடன், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து இலவங்கப்பட்டை பொடி சேர்த்து குழைத்துக் கொள்ளுங்கள். முதலில் வேப்பிலையை நன்றாக அரையுங்கள். பிறகு அதை பேஸ்ட்டாக்கி அதனுடன் தேன் மற்றும் பட்டை பொடி சேர்த்து சருமத்தில் அப்ளே செய்யுங்கள். 10 நிமிடங்கள் முகத்தை அப்படியே காய வைத்து பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவுங்கள். சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் நன்றாக உணரலாம்.

​முல்தானி மெட்டி பேக்

முல்தானி மெட்டி மற்றும் வேப்பிலை இரண்டும் முக அழகுக்கு உதவக் கூடியது. 15-20 வேப்பிலையை எடுத்து முதலில் அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு தேக்கரண்டி முல்தானி மெட்டி, சிறுதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் விட்டு விடுங்கள். பிறகு நீரில் முகத்தை கழுவுங்கள். இந்த பேக் உங்க சரும பிரச்சனைகளை போக்க உதவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்