ஆப்நகரம்

New Year 2020 Eve Party: நியூ இயர் பார்ட்டியை உங்களுக்கு பிடித்த ஃபாஷன் டாப்ஸ்களோடு கொண்டாடுங்கள் ..

விதவிதமான வண்ணங்களில் விதவிதமான டிஸைன்களில் டாப்ஸ் வகைகள் கிடைக்கிறது. பண்டிகைகாலங்களில் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் ஃபேஷன் விரும்பும் பெண்களுக்கு புது புது டிஸைன்களில் மனதை மயக்கும் வகையில் டாப்ஸ் வகைகள் வருகி றது. இருந் தாலும் குறிப்பிட்ட சில மாடல்கள் ட்ரெண்டிங்கான டாப்ஸ் வகையில் தொடர்ந்து இருக்கிறது. அந்த வகையில் சில வெரைட்டிகளை கொடுத்திருக்கிறோம். பார்த்து மகிழ்வதோடு வாங்கி அணிந்து கொள்ளுங்கள். இந்த நியூ இயர் கொண்டாட்டத்தில் உங்கள் ஆடை மேலும் உங்களை அழகு தேவதையாக காட்டும்.

Samayam Tamil 30 Dec 2019, 8:43 pm
விதவிதமான வண்ணங்களில் விதவிதமான டிஸைன்களில் டாப்ஸ் வகைகள் கிடைக்கிறது. பண்டிகைகாலங்களில் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் ஃபேஷன் விரும்பும் பெண்களுக்கு புது புது டிஸைன்களில் மனதை மயக்கும் வகையில் டாப்ஸ் வகைகள் வருகி றது. இருந் தாலும் குறிப்பிட்ட சில மாடல்கள் ட்ரெண்டிங்கான டாப்ஸ் வகையில் தொடர்ந்து இருக்கிறது. அந்த வகையில் சில வெரைட்டிகளை கொடுத்திருக்கிறோம். பார்த்து மகிழ்வதோடு வாங்கி அணிந்து கொள்ளுங்கள். இந்த நியூ இயர் கொண்டாட்டத்தில் உங்கள் ஆடை மேலும் உங்களை அழகு தேவதையாக காட்டும்.
Samayam Tamil celebrate the newyear in these fashionable trendy wears
New Year 2020 Eve Party: நியூ இயர் பார்ட்டியை உங்களுக்கு பிடித்த ஃபாஷன் டாப்ஸ்களோடு கொண்டாடுங்கள் ..


​பீப்ளம் டாப்ஸ்

அழகான மாடல் என்பதோடு காண்பவரையும் அசத்தும் டாப்ஸ் வகையில் இந்த பீப்ளம் டாப்ஸ்-ம் ஒன்று. மேலிருந்து சாதாரணமாக இருக்கும் இந்த டாப்ஸின் அடிப்பகுதி மட்டும் அழகாக விரிந்து இடுப்பழகை மேலும் அழகுப்படுத்தி காட்டும். குழந்தைகளின் பழைய ஃப்ராக் மாடலான ஃப்ரில் ப்ராக் போன்ற தோற்றத்தை கொடுக்கும் இதை அணிந்தால் இடுப்பு அழகு தனியாக தெரி யும். உடல் ஒல்லியாக இருக்கிறதே என்று கவலைப்படும் பெண்கள் இந்த டாப்ஸை அணிந்தால் கொஞ்சம் பூசினாற் போன்று தெரிவார்கள்.

​க்ராப் டாப்ஸ்

வயிறு தெரியும்படியான டாப்ஸ் இது. மாடல் அழகிகள் மட்டுமல்லாமல் இன்று பல யுவதிகளும் இதை விரும்புகிறார்கள். பார்ட்டிக்கு இந்த டாப்ஸ் போடலாம். விழாக்களின் போதும் இந்த க்ராப் டாப்ஸ் அழகாய் இருக்கும்.


சற்று பருமனாக இருப்பவர்கள் இதை அணியலாம். ஆனால் அதிக பருமன் அல்லது இடையில் அதிக சதை இருப்பவர்களுக்கு இந்த டாப்ஸ் உகந்ததல்ல என்பது ஃபேஷன் டிஸைனர்களின் கருத்து. எனி னும் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் இந்த டாப்ஸ் உங்கள் இடையழகை எடுத்துகாட்டவே செய்யும்.

​ஏஸ்மெட்ரி்க் டாப்ஸ்

ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வார்கள். ஆனால் இந்த டாப்ஸ் எல்லாமே ஏற்றமும் இறக்கமு மாய் தான் இருக்கும். ஒரு பக்கம் சரியாகவும் மறுபக்கம் இறக்கம் அல்லது ஏற்றமுமாக இருக்கும். அந்த காலத்தில் இப்படி டெய்லர் தைத்து கொடுத்தால் கோமாள் என்று சொல்வோம். இப்போது இப்படி ஏத்தமும் இறக்கமுமாக இருக்கும் இந்த ஏஸ்மெட்ரிக் டாப்ஸ் இன்னும் இன்னும் உங்களை அழகாக காட்டும். உங்கள் அழகோடு ஆடையின் அழகையும் எடுத்துகாட்டும்.

​ஃப்ரெண்ட் நாட் டாப்ஸ்

நாட் போட்டு டிரஸ் போடுவது புதிதல்ல. ஆனால் அதை ப்பிளவுஸ் தைக்கும் போது பின்புறமாக வைத்து தைப்பது வழக்கம். பிறகு பெண்கள் சல்வாரிலும் வைத்து தைக்க தொடங்கினார்கள். நாளடைவில் அந்த நாட் ஃப்ரெண்ட் பக்கம் வைத்து தைத்து வரும் டாப்ஸ்கள் இப்போது பிரபலமாகி வருகிறது. ஸ்கர்ட் அணியும் பெண்களுக்கு இந்த ஃப்ரெண்ட் நாட் டாப்ஸ் பாந்தமாய் பொருந்தி கொள்ளும்.

​ஒன் ஷோல்டர் டாப்ஸ்

ஒரு பக்க தோள்பட்டையை தவிர்த்து அணியும் மாடல் இது. ஆரம்ப கட்டத்தில் குழந்தைகளின் உடையில் இதை அதிகம் பார்த்தோம். தற்போது இளம் பெண்களின் டாப்ஸ் வகைகளிலும் இந்த ஒரு பக்கம் மட்டும் அணியும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது கண்களை உறுத்தாத வகையில் தான் இவை இருக்கும் என்பதால் இதை தைரியமாக வாங்கி நீங்கள் அணியலாம்.

​சோக்கர் டாப்ஸ்

கழுத்தை ஒட்டி அணியும் டாப்ஸ் வகைகளே சோக்கர் டாப்ஸ் என்று அழைக்கிறார்கள். இதை தேர்வு செய்யும் போது அடர்ந்த நிறமாக இருந்தால் அவை மேலும் எடுத்துகாட்டும். சோக்கர் மாடல் டாப்ஸ் அணியும் போது கழுத்துக்கு ஆபரணங்கள் அணிய தேவையில்லை என்பதால் பல பெண்களின் விருப்பம் இதுதான். ஸ்கர்ட், நீளமான பாவாடைகளுக்கு இவை சிறந்த தேர்வாக இருக்கும்.

​லேஸ் டாப்ஸ்

லேஸ் டிஸைனுக்காக பொருத்தப்படும். ஆனால் இதையே சற்று வித்தியாசமாக்கி டாப்ஸ் மாடலாக வந்திருக்கிறது. இவை உள் உடலை எடுத்துகாட்டும் என்பதால் பெரும்பாலும் நடிகைகள் மற்றும் மாடர்ன் யுவதிகளின் தேர்வாகத்தான் இவை இருக்கிறது. தற்போது இந்த லேஸ் டாப்ஸ் சற்று மேலாக கை, கழுத்து பகுதியில் மட்டும் வைத்தும் வருகிறது. அனைத்து வயதினருக்கும் பொருத்தமான லேஸ் டாப்ஸ்கள் அழகான டிஸைன்களில் கிடைக்கிறது.

​ஆஃப் ஷோல்டர் டாப்ஸ்

தோள்பட்டையை அழகாய் காட்டும் வகையில் வடிவமைத்திருக்கும் ஆஃப் ஷோல்டர் டாப்ஸ் முத லில் நடிகைகளின் விருப்பமாக இருந்தது. தற்போது எல்லோருக்கும் இந்த மாடலை விரும்பி அணிய தொடங்கியிருக்கிறார்கள். விழாக்காலங்களில் நாகரிக யுவதியா வலம் வர நினைக்கும் அனைவ ருக்கும் இந்த டாப்ஸ் உதவும். மேலும் இவை கண்களை உறுத்தாமல் நாகரிகமாகவும் இருக்கும் என்பதால் பெரும்பாலோனோர் இன்று இதை விருப்பத்துடன் வாங்கி அணிகிறார்கள். உங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இந்த ஆஃப் ஷோல்டர் டாப்ஸ் உங்கள் அழகை கூட்டி ஆனந்தமாக வைக்க உதவும்.

​லாங்க் டாப்ஸ்

இவை பொதுவானது. இளம்பெண்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயது பெண்களும் இந்த வகை டாப்ஸ்களை அணிவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். இந்த வகையான டாப்ஸ்களுக்கு பேண்ட், லெக்கின்ஸ், ஜீன்ஸ் இவை அனைத்துக்குமே இது பொருந்தும் என்பதோடு சேலையை போன்று நாக ரிகமான தோற்றத்தை தரக்கூடியது என்பதால் நடுத்தர வயது பெண்களும் இதை விரும்புகிறார்கள்.


ப்ளெயின் டாப்ஸிலிருந்து தற்போது எம்பிராய்டரி, சமிக்கி வேலைப்பாடுகள் என்று பட்ஜெட் விலையிலிருந்து கிடைக்கிறது.

​கவனிக்க வேண்டியது

உங்கள் தோற்றத்துக்கு எடுப்பாக இருக்க கூடிய நிறத்தை தேர்வு செய்வது முக்கியம். அடுத்து மாடல் எதுவாக இருந்தாலும் அவை உங்களுக்கு பொருந்துமா உங்கள் உடல் எடையை அதிகரித்து காட்டுமா என்பதையும் கவனியுங்கள். நாகரிகமாக டாப்ஸ் அணிவது தவறில்லை. ஆனால் உங்களுக்கு அசெளகரியம் இல்லாமல் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள்.


அதிக வேலைப்பாடு கொண்ட டாப்ஸ்களும் உண்டு, ப்ளெயின் டாப்ஸ்களும் உண்டு.மேலும் காட்டன், பனியன், லெனின், ஜீன், ஜூட் துணிகளில் தயாரிக்கும் டாப்ஸ் வகைகளில் உங்களுக்கு பொருத்தமானதை தேர்வு செய்யவும் தயங்காதீர்கள். கொடுத்திருக்கும் அனைத்து டாப்ஸ் வகை களும் பண்டிகை விழாக்காலங்களை கொண்டாடும் வகையில் ட்ரெண்டி ஃபேஷன் வகைகள். புத்தாண்டு கொண்டாட்டத்தில் இந்த டாப்ஸ்கள் உங்கள் கொண்டாட்டத்தை மேலும் இனி மையாக்கட்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்