ஆப்நகரம்

goat milk for skin: ஆட்டுப்பாலை சருமத்துக்கு பயன்படுத்தினா என்ன மாதிரி பலன்கள் கிடைக்கும்...

நமது சருமம் மிகவும் சென்சிடிவ் ஆனது. அதற்கு சருமப் பராமரிப்பு பொருள்களைத் தேர்வு செய்யும்போதும் பயன்படுத்தும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக நம்முடைய சரும வகை என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப சருமப் பராமரிப்பு பொருள்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

Samayam Tamil 14 Jun 2022, 12:42 pm
நம்முடைய சருமத்திற்கு ஆட்டுப்பால் பயன்படுத்தும் போது, அது சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. ஆட்டுப்பால் பயன்படுத்தும் போது சருமத்திற்கு எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. நேரடியாக ஆட்டுப்பால் எல்லா நேரத்திலும் பயன்படுத்த முடியாது. கிடைக்கவும் செய்யாது. அதனால் தற்போது மார்க்கெட்டுகளில் அதிக அளவில் ஆட்டுப்பாலை உட்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் சருமப் பராமரிப்பு பொருள்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.
Samayam Tamil how does work goat milk products for your skin care
goat milk for skin: ஆட்டுப்பாலை சருமத்துக்கு பயன்படுத்தினா என்ன மாதிரி பலன்கள் கிடைக்கும்...


​ஆட்டுப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

ஆட்டுப்பாலில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாததால் இதிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கையான மூலப் பொருட்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

பசும்பாலைக் காட்டிலும் இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும் ஆட்டுப் பாலில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது.

​சருமத்துக்கு ஆட்டுப்பால் பயன்படுத்தும் முறை

ஆட்டுப் பாலை நேரடியாக நமது சருமத்தில் ஃபேஸ் மாஸ்க் போன்று பயன்படுத்தலாம் அல்லது பிற அழகு சாதனப் பொருட்களான மஞ்சள், சந்தனம் போன்றவற்றுடன் கலந்தும் பயன்படுத்தலாம். தினசரி ஆட்டுப்பாலை உங்கள் முகத்தில் தடவி வர உங்கள் முகத்திற்கு பொலிவு கிடைப்பது உறுதி.

​சருமத்துக்கு ஆட்டுப்பாலின் நன்மைகள்

ஆட்டுப் பாலில் நிறைந்துள்ள இயற்கையான அமிலங்கள் நமது சருமத்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. சருமத் தடிப்பு, தோல் அழற்சி மற்றும் சரும அரிப்பு, எரிச்சல் போன்ற முக்கிய சரும பிரச்சனைகள் இருப்பவர்கள் ஆட்டுப் பாலை பயன்படுத்தலாம்.

மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்றவற்றில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள், நமது சருமம் முன்கூட்டியே வயதானது போல தோற்றமளிப்பதிலிருந்து பாதுகாக்கிறது.

​முகப்பருவை விரட்டும் ஆட்டுப்பால்

ஆட்டுப்பால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது.

ஆட்டுப்பாலில் உள்ள புரதங்கள் இயற்கையில் நுண்ணுயிர் எதிர்ப்பி ஆக செயல்படுவதால் இது முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை தடுக்க உதவுகிறது.

மேலும் ஆட்டுப்பால் இயற்கையான மாய்ச்சுரைசராகவும் செயல்படுகிறது. இது சருமத்தில் எளிதாக உறிஞ்சப்பட்டு சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

​எரிச்சல் மற்றும் வீக்கத்தை குறைக்கும் ஆட்டுப்பால்

ஆட்டுப் பாலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நமது சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தை சரி செய்ய உதவுகிறது.

நேரடியாக ஆட்டுப்பால் உங்களுக்கு கிடைக்காவிடில், சந்தைகளில் ஆட்டுப் பால் சேர்த்து தயாரிக்கப்படும் சோப்புகள் கிடைக்கின்றன. அதனை நீங்கள் பயன்படுத்தலாம். அவற்றிலிருந்து நீங்கள் ஆட்டுப்பாலில் நன்மைகளை பெறமுடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்