Please enable javascript.Skin Care Tips Of Oil Skin,ஆயில் ஸ்கின்னை நார்மல் ஸ்கின்னாக மாற்றுவது எப்படி? அதுவும் இயற்கையாக வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து... - how to change your oil skin to normal with natural ingrediants - Samayam Tamil

ஆயில் ஸ்கின்னை நார்மல் ஸ்கின்னாக மாற்றுவது எப்படி? அதுவும் இயற்கையாக வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து...

Samayam Tamil 11 Nov 2021, 1:15 pm
Subscribe

உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால் தினமும் மூன்று விதமான சரும பராமரிப்புக்களை மேற்கொள்வது அவசியம். சருமத்தை சுத்தப்படுத்துதல், டோனர் மற்றும் மாய்ஸ்சரைசர் போன்ற விஷயங்களை செய்வது உங்க சரும எண்ணெய் பசையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதை எப்படி செய்யலாம் மேலும் இதற்கு எந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என அறிந்து கொள்வோம்.

how to change your oil skin to normal with natural ingrediants
ஆயில் ஸ்கின்னை நார்மல் ஸ்கின்னாக மாற்றுவது எப்படி? அதுவும் இயற்கையாக வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து...
நம் சருமம் ஆரோக்கியமாக இருக்க தினமும் சருமப் பராமரிப்பை மேற்கொள்வது அவசியம். நம் சருமத்தின் எண்ணெய் பசையானது சமநிலையில் இருக்க வேண்டும். கொஞ்சம் கூடுதலாக இருந்தால் கூட அதனால் பருக்கள் மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்கள் சரும துளைகளை அடைத்து பருக்களை உண்டாக்குகிறது. எனவே சருமத்தில் எண்ணெய் பசையை சரியான அளவில் பராமரிப்பதன் மூலம் தேவையில்லாத சரும பிரச்சனைகளை நம்மால் ஓரங்கட்ட முடியும். சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்கி உங்க சருமம் பொலிவும் பளபளப்பும் பெற கீழ்க்கண்ட டிப்ஸ்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

​எண்ணெய் பசையை போக்க என்ன செய்ய வேண்டும் :

​எண்ணெய் பசையை போக்க என்ன செய்ய வேண்டும் :

நாம் நினைக்கிறோம் கடைகளில் வாங்கி பயன்படுத்தும் மாய்ஸ்சரைசர்கள், பேஸ் வாஷ்கள் போன்றவை நம் சரும எண்ணெய் பசையை கட்டுப்படுத்த உதவும் என நம்புகிறோம். ஆனால் உண்மையில் இந்த அழகு சாதனப் பொருட்கள் சரும எண்ணெய் பசையை ஒருபோதும் கட்டுப்படுத்தாது. இவை தற்காலிமாக வேண்டுமானால் சருமத்தில் உள்ள செபாசியஸ் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தலாம் ஆனால் 5 அல்லது 6 மணி நேரத்திற்குப் பிறகு உங்க சருமம் மீண்டும் எண்ணெய் பசை பெற ஆரம்பித்து விடும் என்கிறார்கள் சரும நிபுணர்கள்.

அதே மாதிரி அதிகப்படியான பேஸ் மாஸ்க்களை பயன்படுத்துவது, அடிக்கடி பார்லர் செல்வதை தவிருங்கள். ஏனெனில் பார்லர் பொருட்களில் ஏராளமான இராசயனப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இந்த இராசயனப் பொருட்கள் உங்க செபாசியஸ் சுரப்பிகளை அதிக எண்ணெய்யை உற்பத்தி செய்ய வைக்கும். மேலும் அதிகப்படியான கழுவுதல், சுத்தப்படுத்துதல், டோனிங் மற்றும் மறைத்தல் போன்றவை உங்க சருமத்தில் நீரிழப்பை ஏற்படுத்தலாம்.

அதே மாதிரி ஸ்க்ரப் செய்வதும் உங்க எண்ணெய் பசையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதே மாதிரி உணவில் அதிகப்படியான உப்பை சேர்த்துக் கொள்வதை குறையுங்கள். அதிகப்படியான உப்பு உட்கொள்வது உங்களுக்கு நீரிழப்பு, நீர்த் தேக்கம் மற்றும் கண்களில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

​தவிர்க்க வேண்டியவை

​தவிர்க்க வேண்டியவை

அழற்சியை ஏற்படுத்தக் கூடிய கொழுப்பு உணவுகளை தவிருங்கள். உங்களுக்கு ஏற்கனவே எண்ணெய் பசை சருமம் என்றால் கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது முற்றிலும் நல்லது. ஆட்டிறைச்சி, பீட்சா, வெண்ணெய், க்ரீம்கள், சீஸ், கேக்குகள் மற்றும் பேஸ்ட்ரிகள் போன்ற உணவுகளை தவிருங்கள். இவை உங்க எண்ணெய் பசையை அதிகரிக்கும்.

பயன்படுத்த வேண்டிய 3 பொருட்கள் :

பயன்படுத்த வேண்டிய 3 பொருட்கள் :

ஓட்ஸ் எந்த வகையான சருமத்திற்கும் ஏற்ற ஒன்று. இது சரும ஈரப்பதத்தை மீட்டெடுக்க உதவுகிறது. இது உங்க சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை குறைக்க உதவி செய்யும். ஓட்ஸில் இயற்கையாகவே சபோனின் காணப்படுகிறது. இது உங்க சருமத்திற்கு ஏற்ற ஒன்றாக அமையும்.

ஓட்ஸ் மாவில் மஞ்சள் சேர்த்து இயற்கையான க்ளீன்சராக பயன்படுத்தலாம். இதைக் கொண்டு உங்க முகத்தை மெதுவாக சுத்தம் செய்து வரலாம். 5:1 என்ற விகிதத்தில் ஓட்ஸ் மாவு மற்றும் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து அவ்வப்போது பயன்படுத்தி வாருங்கள். இந்த பொடியை 6 மாதங்கள் வரை பயன்படுத்தி வரலாம். இருப்பினும் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சீக்கிரம் பொடி கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது.

​இயற்கையான மாய்ஸ்சரைசரை எப்படி தயாரிப்பது :

​இயற்கையான மாய்ஸ்சரைசரை எப்படி தயாரிப்பது :

எண்ணெய் சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசர் என்றால் அது கற்றாழை ஜெல் மட்டும் தான். கற்றாழை ஜெல் நிறைய சரும பிரச்சனைகளை களைய உதவுகிறது. இது சரும ஈரப்பதத்தை சீக்கிரம் உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது. கற்றாழை ஜெல்லில் ஆன்டி பாக்டீரியல் தன்மை காணப்படுகிறது. இது பருக்களை போக்க பயன்படுகிறது.

எண்ணெய் சருமத்திற்கான டோனர் :

எண்ணெய் சருமத்திற்கு ரோஸ் வாட்டர் மற்றும் ஆப்பிள் சிடார் வினிகர் டோனர் சிறந்ததாக இருக்கும். நிறைய பேருக்கு T-zone பகுதியில் அதிக எண்ணெய் பசை இருக்கும். அதற்கு நீங்கள் ஆப்பிள் சிடார் வினிகரை டோனராக பயன்படுத்தலாம். இது சரும pH அளவை பராமரிக்க உதவுகிறது. முகத்தில் உள்ள எண்ணெய்யை போக்க இது உதவி செய்யும்.

கிளன்சிங்

கிளன்சிங்

எந்தவொரு சரும பராமரிப்புக்கும் முதலில் சுத்தப்படுத்துவது மிகவும் அவசியம். முதலில் சுத்தப்படுத்த உங்க முகத்தை சாதாரண நீரில் கழுவி பிறகு ஓட்ஸ் க்ளீன்சரை சிறிதளவு எடுத்து பயன்படுத்துங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 1 நிமிடம் உங்க விரல்களை வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு சுத்தமான நீரில் கழுவி துண்டைக் கொண்டு நன்றாக துடைத்து எடுங்கள்.

டோனிங்

டோனிங்

டோனிங் செய்ய ரோஸ் வாட்டர் மற்றும் ஆப்பிள் சிடார் வினிகரை பயன்படுத்துங்கள். ஆப்பிள் சிடார் வினிகர் சிறந்த டோனராக செயல்படுகிறது. உங்க எண்ணெய் சருமத்திற்கு ரோஸ் ஹைட்ரோ-சோல் டோனரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஆப்பிள் சிடார் வினிகரின் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி செப்டிக் பண்புகள் முகப்பருக்களை தடுக்க உதவுகிறது. pH அளவை பராமரிக்க உதவுகிறது. பருக்கள், சரும புள்ளிகள் மற்றும் சரும சுருக்கங்களை போக்க உதவுகிறது. அதேமாதிரி ரோஸ் வாட்டர் டோனர் கரும்புள்ளிகள், வெள்ளை புள்ளிகள், பருக்களை போக்க உதவுகிறது.

மாய்ஸ்சரைசர்

மாய்ஸ்சரைசர்

கற்றாழை ஜெல் சிறந்த மாய்ஸ்சரைசர் ஆக பயன்படுகிறது. ஒரு பட்டாணி அளவு கற்றாழை ஜெல்லை எடுத்து முகம் மற்றும் கழுத்து போன்ற இடங்களில் நன்றாக உறிஞ்சும் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும்.

மேற்கண்ட விஷயங்களை செய்து வந்தாலே உங்க எண்ணெய் பசை சருமத்தை நம்மால் சமாளிக்க முடியும். பருக்கள் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

உங்கள் கருத்தை பதிவு செய்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்