ஆப்நகரம்

Upper lip hair: பெண்களே.. மீசை மாதிரி முடி வளருதா.. இப்படி செஞ்சு பாருங்க.. அப்படியே காணாமல் போய்ரும்!

பெண்களுக்கு இருக்கும் சங்கடமான பிரச்சனையில் முக்கியமானது உதடு பகுதியில் இருந்து முடி அகற்றுவது தான். அதை அகற்ற இந்த வைத்தியங்கள் உதவும்.

Samayam Tamil 20 May 2022, 7:58 pm

ஹைலைட்ஸ்:

  • ட்வீசர் பயன்படுத்துவதால் அது சருமத்தில் சிவப்பையும் எரிச்சலையும் சில நிமிடங்கள் உண்டாக்கும்.
  • முடி வெளியேற்றுக் க்ரீம்கள் தொடர்ந்து பயன்படுத்தகூடாது. இதில் இருக்கும் இராசயனங்கள் தீங்கு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil how to get rid of upper lip hair at home
Upper lip hair: பெண்களே.. மீசை மாதிரி முடி வளருதா.. இப்படி செஞ்சு பாருங்க.. அப்படியே காணாமல் போய்ரும்!
பெண்களுக்கு மேல் உதடு முடி அகற்றுவது வேதனையான வலியை கொடுக்கும். பல்வேறு முறைகளை முயற்சித்தாலும் எல்லாமே பெருமளவு வேதனையானவை தான் என்பதை மறுக்க முடியாது. ஆனால் இந்த முடியோடு வெளியே செல்லவும் முடியாது என்பதால் அந்த வலியோடு முடியை வெளியேற்ற நினைக்கிறார்கள் என்பது தான் உண்மை. அப்படி வெளியேற்றகூடிய வகைகளில் நீங்கள் செய்ய வேண்டியவை என்ன என்பதை பார்க்கலாம்.
turmeric benefits : மஞ்சள் ஃபேஸ் பேக் இப்படி போட்டா ஒரு வாரத்துக்கு முகம் ஜொலிக்குமாம்! உடனே ட்ரை பண்ணுங்க!

மேல் உதடு முடி அகற்றுவது -த்ரெடிங் செய்வது

இது பாரம்பரியமானது ஆனால் மேல் உதட்டின் மீது முடியை அகற்றுவதில் வேதனையானது. இது முடியை வேரோடு பிடிங்கி, நிலையற்ற ஆனால் நீண்ட கால விளைவுகளை உருவாக்குகிறது. இந்த முடி அகற்றும் முறையில் நூல்களை பயன்படுத்தி முடியை வெளியேற்றக்கூடியது. இரண்டு நூல்களை சுருட்டி முடி வளர்ச்சி இருக்கும் நுண்ணறை பகுதியில் இருந்து முடியை வேரோடு அப்புறப்படுத்தும்.



இந்த த்ரெடிங் செய்வது சுகாதாரமான முறை என்று சொல்லலாம். ஏனெனில் நூல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும். மேலும் பயன்பாட்டுக்கு பிறகு அது வெளியேற்றப்படுகிறது. அதோடு த்ரெடிங் செய்த பிறகு நீங்கள் குறைந்தது 15-20 நாட்கள் வரை அப்படியே இருக்கலாம்.

மேல் உதடு முடி அகற்றுவது - முடி வெளியேற்றுக் க்ரீம்கள்

தேவையற்ற முடிகளை அகற்ற எளிதான வழி இது என்று சொல்லலாம். ஏனெனில் இது வலியையும் குறைக்கும். இந்த க்ரீம்கள் வாங்கி முடி வளரும் பகுதியில் தடவ வேண்டும். பிறகு குறிப்பிட்ட நேரம் (அந்த க்ரீம்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பொதுவாக 3 முதல் 10 நிமிடங்கள் வரை) பிறகு ஒரு ஸ்பேட்டுலாவை பயன்படுத்தி அதை வெளியேற்றலாம். இந்த க்ரீமில் இருக்கும் ராசயனனங்கள் மேற்புற முடியை கரைக்கும். இதனால் மேல் உதடு முடி சிறிது நேரத்தில் வெளியேறிவிடும்.

எனினும் இதை தொடர்ந்து பயன்படுத்தகூடாது. ஏனெனில் இதில் இருக்கும் இராசயனங்கள் தீங்கு விளைவிக்கும் எதிர்வினைகளை ஏற்படுத்தலாம். இது சருமத்தில் எரிச்சலை உண்டு செய்யலாம். அதனால் க்ரீம்கள் பயன்படுத்துவதற்கு முன்பு முதலில் பேட்ச் டெஸ்ட் பரிசோதனை செய்வது நல்லது.

மேல் உதடு முடி அகற்றுவது - வேக்ஸிங்

வேக்ஸிங் செய்வது வலிமிகுந்த முறை என்று சொல்லலாம். ஆனால் இது க்ரீம்களை விட சிறந்த பலன் அளிக்கும். நீண்ட காலம் நீடிக்கும். எனினும் இந்த வேக்ஸிங் முறையை முதல் முறை செய்யும் போது சுயமாக செய்யாமல் நிபுணரிடம் கற்று செய்வது நல்லது. விட்டிலும் இதை செய்யலாம்.

சூடான மெழுகை முடியின் மீது தடவி அதன் மேல் மெல்லிய துண்டு போட்டு,முடி வளரும் திசையில் இழுக்கவும். இல்லையெனில் சொறிந்து விட்டுவிடலாம். முடி குறிப்பிட்ட நீளமாக இருக்கும் போது மெழுகு பயன் அளிக்கும். அதே நேரம் முடி நீளம் கால் முதல் முக்கால் அங்குலம் வரை இருந்தால் அது அதிக வலியை உண்டு செய்யும்.

மேல் உதடு முடி அகற்றுவது - ட்வீசர்

இது மேல் உதடு முடி அகற்ற நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் மீண்டும் முடி வளர நீண்ட நாள் ஆகும். இந்த ட்வீசர் கொண்டு முடியை அப்புறப்படுத்தும் போது முடியின் வளர்ச்சியின் திசையில் கூர்மையாக இழுக்கும் போது சருமத்தை ஒரு கையால் பிடித்துகொள்ள வேண்டும்.

இந்த ட்வீசர் பயன்படுத்துவதால் அது சருமத்தில் சிவப்பையும் எரிச்சலையும் சில நிமிடங்கள் உண்டாக்கும். அப்போது சருமத்தின் மீது கற்றாழை ஜெல் தடவுவது சருமத்தில் எரிச்சலை குறைக்கும்.இந்த ட்வீசர் பயன்பாடு முடி வளர்ச்சி அதிகம் இல்லாத போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

pigmentation : கரும்புள்ளியும் தழும்பும் மறையவே இல்லையா, இந்த அஞ்சுல ஒண்ணு யூஸ் பண்ணுங்க! அசந்துடுவீங்க!

மேல் உதடு முடி அகற்றுவது - லேசர் மூலம் முடி அகற்றுவது



இது மேல் உதடு முடிகளை அகற்றுவதற்கு உங்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும். தோல் மருத்துவர் முடியை வெளியேற்ற மயிர்க்கால்கள் மீது லேசர் செறிவூட்டப்பட்டஒளிக்கற்றை பயன்படுத்த வேண்டியிருக்கும். எனினும் நிரந்தர முடிவை பெறுவதற்கு பல முறை செய்ய வேண்டியிருக்கும்.

மேல் உதடு முடி அகற்றுவது - ரேஸர் பயன்படுத்துவது

இந்த முறையை அநேகம் பேர் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். எளிய முறை என்பதோடு செலவில்லாததும் கூட. உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்கள் க்ரீம் தடவி முடி வளர்ச்சிக்கு எதிர்திசையில் இழுப்பதை காட்டிலும் இது பொருத்தமானது.

ஷேவிங் செய்வதற்கு முன்பு க்ரீம் அல்லது சோப்பை பயன்படுத்துங்கள். பிறகு முடி வளரும் திசையில் ரேசரை பயன்படுத்துங்கள். ஷேவிங் செய்த பிறகு கற்றாழை ஜெல் பயன்படுத்துங்கள் இந்த முறையில் முடியை வெளியேற்றும் போது அது 3- 5 நாட்களில் வளர்ந்து விடலாம் ஏனெனில் ரேஸர் மூலம் முடி அகற்றுவது தோல் மட்டத்திலிருந்து முடியை அகற்றும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்