ஆப்நகரம்

ஹாட்டான நிலையிலும் முகம் ஜில்லுனு இருக்க தேங்காய் போதுமாம், விதவிதமா எப்படி யூஸ் பண்ணனும்னு நிபுணர் சொல்றதை கேளுங்க!

தேங்காய். ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் தன்னுள் கொண்டு வைத்துள்ளது என்று சொல்லலாம். இந்த தேங்காய் ஒன்றை மட்டும் வைத்து கோடையில் அழகுபராமரிப்பை மேற்கொள்ளலாம். எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

Authored byதனலட்சுமி | Samayam Tamil 13 Apr 2023, 8:34 am
தேங்காய் இயற்கையானது. இராசயனங்கள் இன்றி கிடைக்கும் அற்புதமான இயற்கை பொருளில் இதுவும் ஒன்று. தேங்காய் உள்ளுக்கும் வெளிப்பராமரிப்புக்கும் அற்புதமான நன்மைகளை செய்யக்கூடியது. தேங்காயில் இருந்து தயாரிக்கப்படும் தேங்காயெண்ணெய், தேங்காய்ப்பால் இரண்டும் சருமத்துக்கும் கூந்தலுக்கும் அத்தனை அற்புதங்களை செய்யும். குறைந்த பட்ஜெட்டில் சருமம், கூந்தல் பராமரிக்க முடியும் என்றால் அது தேங்காயில் தான் என்கிறார் அழகுக்கலை நிபுணர் டாக்டர் வசுந்தரா. தேங்காயை எப்படி பயன்படுத்தலாம் என்ற குறிப்புகளை இங்கு அளிக்கிறார்.
Samayam Tamil how to use coconut during summer to get healthy skin and hair according to beautician
ஹாட்டான நிலையிலும் முகம் ஜில்லுனு இருக்க தேங்காய் போதுமாம், விதவிதமா எப்படி யூஸ் பண்ணனும்னு நிபுணர் சொல்றதை கேளுங்க!


​தேங்காய் நன்மைகள்​

தேங்காய் கார்போஹைட்ரேட் குறைந்தவை. கொழுப்பு மிகுந்தவை என்றாலும் ஆரோக்கிய கொழுப்புகள் இதில் அடங்கியுள்ளன.

இதில் பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், வைட்டமின் பி தாமிரம், இரும்பு போன்ற தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை எலும்பு ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்ககூடியவை. இரத்த சிவப்பணுக்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க இதில் உள்ள தாமிரம் மற்றும் இரும்புச்சத்து உதவுகின்றன.
தேங்காயின் சதையில் கொழுப்பு (நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள்) அதிக அளவில் உள்ளது. இது உடனடி ஆற்றலை வழங்குகிறது. உடல் ஆரோக்கியம் போன்று இது சருமத்துக்கும் பல நன்மைகளை அளிக்கிறது’

தேங்காயிலிருந்து பெறப்படும் தேங்காயெண்ணெய், தேங்காய்ப்பால்,, இளநீர் போன்றவை எல்லாமே சருமத்துக்கும் கூந்தலுக்கும் அற்புதமான நன்மைகளை அளிக்கும். அது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

​தேங்காயெண்ணெய்​

தேங்காயெண்ணெய் எளிதாக கிடைக்க கூடியது. செக்கில் ஆட்டிய தேங்காயெண்ணெய் சருமம் மற்றும் கூந்தல் இரண்டுக்கும் மிக மிக நல்லது.

எப்படி பயன்படுத்துவது
தேங்காயெண்ணெயை இலேசாக சூடுபடுத்தி சிக்கில்லாத கூந்தலை பகுதி பகுதியாக பிரித்து உச்சந்தலையில் மயிர்க்கால்களில் என்று தடவி நன்றாக மசாஜ் செய்து பிறகு 20-30 நிமிடங்கள் கழித்து தலைக்குளியல் செய்யலாம். கோடையில் செய்யும் போது உஷ்ணம் தணிக்கும். முடி உதிர்வும் இருக்காது.

​தேங்காய்ப்பால்​

தேங்காய்ப்பாலின் மற்றுமொரு சிறப்பு உடல் ஆரோக்கியம் போன்றே கூந்தல் ஆரோக்கியத்துக்கும் பெரிதும் உதவுவது தான்.

எப்படி பயன்படுத்துவது
வால்மிளகு - 5 (கூந்தல் நீளத்துக்கேறப்)
தேங்காய்ப்பால் - அரை கப்

வால் மிளகு தண்ணீரில் ஊறவைத்த பிறகு அவை மெத்தென்று ஆகி விடும் அதில் தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்து கூந்தல் முழுவதும் தடவலாம். குறிப்பாக பொடுகு இருக்கும் இடங்களில் தடவினால் பொடுகு படிப்படியாக நீங்கும்.

நன்மைகள்
இது உச்சந்தலைக்கு நன்மை செய்யும். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு நன்றாக பலன் அளிக்கும். வறண்ட சருமம் கோடையில் இன்னும் அதிகரிக்கலாம். இதை குறைக்க வால் மிளகு தேங்காய்ப்பால் உதவும்.

​இளநீர் சருமத்துக்கு​

சருமத்துக்கு இளநீர் மிகவும் நன்மை செய்யும். இளநீர் உள்ளுக்கு எடுக்கும் போது உடல் உள் குளிர்ச்சி அடையும். சருமத்துக்கு மேற்பூச்சு செய்யும் போது சரும பிரச்சனைகள் நீங்கும்.

எப்படி பயன்படுத்துவது
வெள்ளரிக்காய் துருவலை இளநீரில் கலந்து முகத்துக்கு பேக் போன்று போட்டு வந்தால் சருமம் குளிர்ச்சியாக இருக்கும். கோடையில் வரும் வியர்க்குரு, கட்டிகள், சிவப்பு போன்றவற்றை தடுத்து சருமத்தை ஜொலிப்பாக வைத்திருக்கும்.

நன்மைகள்
இளநீர் மினரல் சத்து கொண்டது. உடல் சூட்டை தடுக்கும். உடலில் கட்டிகள் வராமல் தடுக்கும். தினமும் ஒரு இளநீர் குடித்து வந்தால் உடல் நன்மைகள் அதிகரிக்கும். சருமமும் அழகாக இருக்கும்.

​தேங்காயெண்ணெய் சருமத்துக்கு கூந்தலுக்கு பயன்படுத்தும் போது​

தேங்காயெண்ணெயை சருமத்துக்கு கூந்தலுக்கு என்று எங்கு பயன்படுத்தினாலும் குளிக்கும் போது சோப்பு தவிர்க்க வேண்டும். சோப்பு தேங்காயெண்ணெய் சருமத்தில் இருந்து நீக்காது. நலுங்கு மாவு, பாசிப்பயறு மாவு, கடலை மாவு போன்றவற்றை கொண்டு குளிக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் தேய்த்து குளித்தால் கூட போதும்

நன்மைகள்
இதனால் சருமம் பூ இதழை போன்று மென்மையாக இருக்கும். வெளிநாட்டில் ஆர்கன் எண்ணெய்க்கு அடுத்து இதை தான் அவர்கள் சொல்கிறார்கள். இது லிக்விட் கோல்டு என்றும் சொல்வது குறிப்பிடத்தக்கது.

​தேங்காய் உள்ளுக்கு எடுப்பதால் அழகு மேம்படுமா​

தேங்காயை உணவில் சேர்த்து வருவது கூட சருமத்தையும் கூந்தலையும் மேம்படுத்தும். தேங்காய்ப்பால், தேங்காய்த்துருவலாக்கி உணவில் சேர்ப்பது என்று அடிக்கடி சேர்த்து வரலாம்.

இளநீர்

இளநீர் போன்று குளிர்ச்சியை தரக்கூடிய ஒன்று எதுவும் இல்லை. உடல் சருமம் குளிர்ச்சிக்கு இது பெரிதும் உதவும். சருமம் வெயிலில் இருந்து வந்தால் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் உஷ்ணக்கட்டிகள் அதிகரிக்கும். அதை போக்க முல்தானிமிட்டி பொடியில் இளநீர் சேர்த்து குழைத்து முகத்துக்கு பேக் போட்டு வந்தால் கட்டிகள் இல்லாமல் கோடையிலும் முகம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

எழுத்தாளர் பற்றி
தனலட்சுமி
நான் தனலட்சுமி சுந்தர். ஊடகத்துறையில் 24 வருடங்கள் சோர்வில்லாத பயணம். லைஃப்ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன். மருத்துவ நிபுணர்களின் பேட்டிகள், கட்டுரைகள் மக்களுக்கு எடுத்து செல்வதில் விருப்பம் அதிகம். ஆன்மிகம், அரசியல் செய்திகள், சினிமா செய்திகளிலும் ஆர்வமும் அனுபவமும் உண்டு. தற்போது Times Internet நிறுவனத்தின் சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்