ஆப்நகரம்

rosemary for hair growth : முடி அடர்த்தியாக வளர ரோஸ்மேரி எப்படி யூஸ் பண்ணனும்.. வாங்க பார்க்கலாம்...

நம் எல்லோருக்குமே தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டுமென்கிற ஆசை இருக்கும். ஆனால் முடி உதிர்தல் பிரச்சினை தான் அதிகமாக இருக்கிறது. இதற்கு ஊட்டச்சத்துக்கள் குறைபாடு தொடங்கி பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இருக்கின்றன. ஆனால் இந்த பிரச்சினைக்கு மிகச்சிறந்த தீர்வாக ரோஸ்மேரி இருக்கும். தலைமுடியின் வளர்ச்சிக்கு ரோஸ்மேரி இலைகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம் வாங்க...

Authored byமணிமேகலை | Samayam Tamil 13 May 2023, 2:33 pm
ரோஸ்மேரி இலைகள் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகளில் உலர்ந்த நிலையில் கிடைக்கின்றன. இதை வாங்கி வைத்துக் கொண்டு எப்போது தேவையோ அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல ரோஸ்மேரி எசன்ஷியல் ஆயில் வடிவிலும் கிடைக்கிறது.
Samayam Tamil how to use rosemary for fast hair growth in tamil
rosemary for hair growth : முடி அடர்த்தியாக வளர ரோஸ்மேரி எப்படி யூஸ் பண்ணனும்.. வாங்க பார்க்கலாம்...


முகப்பருவை நீக்கும் இயற்கை வழி

​ரோஸ்மேரி ஆயில் (rosemary oil)

ரோஸ்மேரி ஆயில் கடைகளில் எசன்ஷியல் ஆயில்களாகக் கிடைக்கின்றன. அதை வாங்கி நீங்கள் வழக்கமாக தலைமுடிக்குப் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் ரோஸ்மேரி ஆயிலைச் சேர்த்து லேசாக சூடாக்கி எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும்போது உச்சந்தலையில் மற்றும் தலைமுடியின் வேர்க்கால்களில் இறங்கும்படி தேய்த்து வட்ட வடிவில் மசாஜ் செய்து வருவதன் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும். தலையில் ஏற்படும் பொடுகு உள்ளிட்ட பூஞ்சைத் தொற்றுக்கள் தீரும்.

​ரோஸ்மேரி ஹேர் ஸ்பிரே (rosemary tonic spray)


ரோஸ்மேரி இலைகள் ஃபிரஷ்ஷாகவும் கிடைக்கும். உலர்ந்த நிலையிலும் கிடைக்கும். இரண்டில் ஏதாவது ஒன்றை ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இந்த இலைகளைப் போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பின்பு அடுபபை அணைத்துவிட்டு ஆறவிடுங்கள்.

நன்கு ஆறியதும் இதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி தலைமுடியின் வேர்க்கால்கள் மற்றும் நுனி வரையிலும் ஸ்பிரே செய்து நன்கு மசாஜ் செய்து விடுங்கள்.

பிறகு அரை மணி நேரம் கழித்து வழக்கம்போல தலைக்கு குளித்துக் கொள்ளலாம். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்து வந்தாலே போதும். தலைமுடி நல்ல வளர்ச்சி அடையும்.

​ஷாம்புவுடன் சேருங்கள்

நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்புவுடன் சில துளிகள் ரோஸ்மேரி ஆயில் அல்லது பொடியைக் கலந்து அப்ளை செய்தும் குளித்து வரலாம்.


அதேபோல ரோஸ்மேரிஉட்பொருளாகக் கொண்ட ஷாம்புவையும் வாங்கி பயன்படுத்தலாம். இது நன்கு முடியைக் கிளன்சிங் செய்வதோடு மாய்ஸ்ச்சரைஸிங்காகவும் வைத்திருக்கும்.

natural hair dye : நரைமுடியை நிரந்தரமா கருப்பாக்கும் இயற்கை ஹேர் டை... இதுக்கு முன்னாடி கேள்வி பட்டிருக்கவே மாட்டீங்க...

​கன்டிஷ்னர் (rosemary conditioner)

ரோஸ்மேரி இலைகளைப் பயன்படுத்தி தலைமுடிக்கு நல்ல கன்டிஷ்னர் தயாரித்து பயன்படுத்தினாலும் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு அதை வடிகட்டி ஆறவிடுங்கள்.

இந்த நீரை வழக்கமாக நீங்கள் தலைக்கு குளிதததும் தலையை கன்டிஷ்னர் பயன்படுத்திவிட்டு அலசுவது போல இந்த நீரை பயன்படுத்தலாம். இது முடிக்கு மிகச்சிறந்த கன்டிஷ்னராகச் செயல்படும்.

​ரோஸ்மேரி டீ

ரோஸ்மேரி இலைகளை டீயாக தயாரித்தும் குடித்து வரலாம். இது மிகச்சிறந்த டீடாக்ஸ் பானமாகவும் செயல்படும. தலைமுடியின் உதிர்வைக் குறைத்து முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும்.

hair care mistakes : வெயில் காலத்தில் முடி உதிராம இருக்கணுமா... அப்போ இந்த தப்பை செய்யவே கூடாது...

முடி வளர்ச்சியை தூண்டும் டானிக்

முடியின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதற்கு இந்த டானிக் பெரிதும் உதவி செய்யும்.

ஹேர் டானிக் செய்முறை:

தேவையான பொருட்கள்:

தண்ணீர் - 2 கப்
ரோஸ்மேரி இலைகள் - 2 ஸ்பூன்
வெந்தய விதைகள் - 1 ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். இதில் வெந்தயத்தையும் ரோஸ்மேரி இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட்ட பிறகு ஆற வைத்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம்.

வெந்தயம், ரோஸ்மேரி இரண்டுமே தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டக் கூடியவை. முடியை பளபளப்புடனும் பட்டு போன்று மென்மையாகவும் வைத்திருக்கச் செய்யும். இந்த டானிக்கை 4 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.



எழுத்தாளர் பற்றி
மணிமேகலை
மணிமேகலை. இளநிலை ஆய்வாளர் பட்டப்படிப்பை (M.Phil) முடித்து கடந்த 9 ஆண்டுகளாக இணைய ஊடகவியல் துறையில் பணியாற்றி வருகிறேன். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நூல்களை வாசிக்கும் ஆர்வம் கொண்ட நான் ஆரோக்கியம், ஃபிட்னஸ், ஃபேஷன், மற்றும் வாழ்வியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது times internet-இன் கீழ் இயங்கும் சமயம் தமிழ் இணையதளத்தில் senior digital content producer ஆகப் பணியாற்றுகிறேன்... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்